உன் கண்ணில்
ஒரு துளி கண்ணீராக
நான் இருந்தால்
உன் கன்னம் தழுவி
உன் உதட்டை சென்றடைந்திருப்பேன்
என் கண்ணில்
கண்ணீராக நீ இருந்தால்
கண்ணீர் சிந்தமாட்டேன்
என் கண்ணில் இருந்து
உன்னை வெளிவிட மாட்டேன்
உன் சுவாசக்காற்றாய்
நான் இருந்தால்
உன் சுவாசமாய் என்றும்
உன்னுள் உன்இதயம் முழுதும்
வியாபித்திருப்பேன்
என் சுவாசக்காற்றாய்
நீ இருந்தால்
உள்ளிழுத மூச்சை
வெளிவிட மாட்டேன்
வெளியே விட்டு
உன்னை தொலைக்கவும் மாட்டேன்