« Reply #7 on: June 19, 2014, 01:46:42 PM »
நியூட்ரிஷியஸ் பேல்

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், பொரி - ஒன்றரை கப், ஆப்பிள் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், துருவிய மாங்காய் - கால் கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, கார்ன் ஃப்ளேக்ஸ் - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
இனிப்பு சட்னிக்கு:
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சை - 6, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு (புளி, திராட்சை, பேரீச்சையை ஊறவைத்து நைஸான விழுதாக அரைக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சற்றே கெட்டியாகும் வரை (சுமார் 2 நிமிடம்) கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி).
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலை, முளைகட்டிய பயறு, தக்காளி, மாதுளை, பொரி, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள் துண்டுகள், கார்ன் ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் கலக்கவும். பரிமாறும் முன் இந்தக் கலவையை தட்டில் போட்டு தேவையான இனிப்பு சட்னி விட்டுக் கலந்து, கரம் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி பரிமாறவும்.
« Last Edit: June 19, 2014, 01:51:37 PM by MysteRy »

Logged