Author Topic: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~  (Read 2655 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மினி சமோசா



தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து,  நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
« Last Edit: June 19, 2014, 12:02:15 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #1 on: June 19, 2014, 12:04:37 PM »
நட்ஸ் பால்ஸ்



தேவையானவை:
 வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், வறுத்த எள் - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், ரஸ்க் - 6, பொடித்த வெல்லம் - 150 கிராம், பேரீச்சை - 6, முந்திரி - 8, உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நெய் - சிறிதளவு.

செய்முறை:
பேரீச்சையை பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #2 on: June 19, 2014, 01:31:01 PM »
சீஸ் ஆலு பன்ச்



தேவையானவை:
துருவிய சீஸ் - கால் கப், உருளைக்கிழங்கு - 4, பிரெட் துண்டுகள் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறுகட்டு (சுத்தம் செய்யவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக் கவும். இதை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
சோள மாவு, பால், மைதா, மிளகுத்தூள், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, இரண்டாக நறுக்கவும். நறுக்கிய பிரெட் துண்டுகளின் மேல் உருளை மசாலாவைத் தடவி, அதன் மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... சுடச்சுட பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #3 on: June 19, 2014, 01:32:59 PM »
டொமேட்டோ ரிப்பன்



தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 கப், தக்காளி - 3, பச்சை மிளகாய் - 4, பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாயை மிக்ஸியில் மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மைதா மாவில் நீர் தெளித்து பிசிறி ஆவியில் வேக வைத்து சலிக்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அரைத்து வடிகட்டிய தக்காளி - பச்சைமிளகாய் சாறு மற்றும் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். மாவை ரிப்பன் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #4 on: June 19, 2014, 01:37:28 PM »
ஸ்பெகாட்டி பனீர் பால்ஸ்



தேவையானவை:
குச்சி நூடுல்ஸ் (ஸ்பெகாட்டி - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம்,  பனீர் - 200 கிராம், சீஸ் - 4 சிறிய துண்டுகள், பால் - 2 கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மைதா - அரை கப், பச்சை மிளகாய், பூண்டு பல் - தலா 4 , ரஸ்க் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கவும். சீஸை நன்கு துருவவும். 6 கப் நீரை நன்கு கொதிக்கவிட்டு, ஸ்பெகாட்டியை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, ஸ்பெகாட்டியைக் குளிர்ந்த நீரில் போட்டு அலசவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நசுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் சோள மாவை பாலில் கரைத்து  சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவை கெட்டியாகிக் கொதித்த உடனேயே உப்பு, ஸ்பெ காட்டி, பனீர், சீஸ், மைதா சேர்த்துக் கலந்து இறக்கி, சிறுசிறு உருண்டை களாக உருட்டவும். உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #5 on: June 19, 2014, 01:41:32 PM »
கார்ன் ஃப்ரிட்டர்ஸ்



தேவையானவை:
பேபி கார்ன் - 10 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்),  சோள மாவு, மைதா மாவு - தலா கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோள மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, தேவையான நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்  கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய  பேபி கார்னை கரைத்த மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #6 on: June 19, 2014, 01:43:41 PM »
சேப்பங்கிழங்கு டிக்கி



தேவையானவை:
சேப்பங்கிழங்கு - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, ஆம்சூர் பொடி - ஒரு சிட்டிகை, முந்திரி - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசிக்கவும். வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக  மிக்ஸியில் பொடிக்கவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும். மசித்த சேப்பங்கிழங்குடன் பொடித்த வேர்க்கடலை, பொடித்த முந்திரி, உப்பு, கடலை மாவு, மிளகாய்தூள், ஆம்சூர் பொடி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசையவும். இதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். இதற்கு, தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #7 on: June 19, 2014, 01:46:42 PM »
நியூட்ரிஷியஸ் பேல்



தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், பொரி - ஒன்றரை கப், ஆப்பிள் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், துருவிய மாங்காய் - கால் கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, கார்ன் ஃப்ளேக்ஸ் - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

இனிப்பு  சட்னிக்கு:
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சை - 6, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு (புளி, திராட்சை, பேரீச்சையை ஊறவைத்து நைஸான விழுதாக அரைக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சற்றே கெட்டியாகும் வரை (சுமார் 2 நிமிடம்) கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி).

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலை, முளைகட்டிய பயறு, தக்காளி, மாதுளை, பொரி, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள் துண்டுகள், கார்ன் ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் கலக்கவும். பரிமாறும் முன் இந்தக் கலவையை  தட்டில் போட்டு தேவையான இனிப்பு சட்னி விட்டுக் கலந்து, கரம் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி பரிமாறவும்.
« Last Edit: June 19, 2014, 01:51:37 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #8 on: June 19, 2014, 01:49:22 PM »
பீஸ் கபாப்



தேவையானவை:
பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கட்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 2 பல், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பை தனித்தனியே வேகவைத்து நீரை வடித்துவிட்டு, இரண்டையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சியை சுத்தம் செய்து... பூண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைக்கவும். இதனுடன் பட்டாணி - கடலைப்பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இந்தக் கலவையை நீள நீளமாக சிலிண்டர் வடிவில் செய்து, ரஸ்க் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #9 on: June 19, 2014, 01:58:59 PM »
பொட்டுக்கடலை மாவு
வேர்க்கடலை பக்கோடா 



தேவையானவை:
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெருஞ்சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். மிளகு, பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும். பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை, பொடித்த மிளகு - பெருஞ்சீரகம், வதக்கி வைத்திருக்கும் கலவை, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #10 on: June 19, 2014, 02:04:53 PM »
ஸ்வீட் பொட்டேட்டோ பட்ஜ்



தேவையானவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப்,  வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேகவிட்டு தோல் நீக்கி, நன்றாக மசிக்கவும். மைதா மாவில் நீர் தெளித்து பிசிறி, ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்க வும். உதிர்த்த மைதா மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவுடன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளை எள், உப்பு மற்றும் மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு நீர்விட்டுப் பிசைந்து சீடை போல சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் ஷீட்டில் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருட்டி வைத்தவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
வாயில் போட்டால் கரையும்... இந்த ஸ்வீட் பொட்டேட்டோ பட்ஜ்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #11 on: June 19, 2014, 02:08:40 PM »
மூங்தால் கிரிஸ்பி



தேவையானவை:
பச்சரிசி - அரை கிலோ, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா கால் கிலோ, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 பாசிப்பருப்பை வறுத்து மாவாக அரைக்கவும். பொட்டுக்கடலை, அரிசியையும் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுகளை நன்கு சலித்து, அவற்றுடன் வெள்ளை எள், உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #12 on: June 19, 2014, 02:11:40 PM »
பனீர் மேத்தி டிக்கி



தேவையானவை:
பனீர் - அரை கிலோ (நன்கு உதிர்க்கவும்), உருளைக்கிழங்கு - 3 வெந்தயக் கீரை - ஒரு சிறிய கட்டு, மைதா - 6 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி யில்லாமல் மசிக்கவும். வெந்தயக் கீரை, கொத்தமல்லியை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். உதிர்த்த பனீர், மசித்த உருளைக்கிழங்கு, 3 டேபிள்ஸ்பூன் மைதா, நறுக்கிய கொத்தமல்லி, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 3 டேபிள்ஸ்பூன் மைதாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுடச்சுட பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #13 on: June 19, 2014, 02:17:18 PM »
பேபி கார்ன் பெப்பர்



தேவையானவை:
பேபி கார்ன் - 6 (வட்டமாக மெல்லியதாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - ஒன்று, வெங்காயத்தாள் - 4, ஆலிவ் ஆயில் - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226340
  • Total likes: 28825
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #14 on: June 19, 2014, 02:38:08 PM »
கோபி கிராக்கெட்ஸ்



தேவையானவை:
காலிஃப்ளவர்- ஒன்று, உருளைக்கிழங்கு - 2, துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் மையாக அரைக்கவும். உருளைக்கிழங்கை  வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும்.
நறுக்கிய காலிஃப்ளவர், மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, 2 டேபிள்ஸ்பூன் மைதா, துருவிய சீஸ், தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவமாக்கவும். இதுதான் கோபி கிராக்கெட்ஸ்.
மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவை சற்று நீர்க்கக் கரைத்து, அதில் கோபி கிராகெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.