Author Topic: ~ பொன்மொழிகள்... ~  (Read 2258 times)

Offline MysteRy

~ பொன்மொழிகள்... ~
« on: May 19, 2014, 07:46:10 PM »
பொன்மொழிகள்...




* உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

* வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

* பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

* ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

* மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

* கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

* அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #1 on: May 25, 2014, 08:07:27 PM »
பொன்மொழிகள்...




* புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.

* கருமியின் நெஞ்சம் சாத்தானின் இருப்பிடம் .

* நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.

* அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.

* நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.

* முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.

* நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.

* நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.

* முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.

* அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.

* முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.

* எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #2 on: June 05, 2014, 07:19:24 PM »
பொன்மொழிகள்...




1. தூய மனச்சாட்சி எந்தத் துன்பத்தையும் தாங்கும் - இங்கிலாந்து

2. பகுத்தறிவின் நாடியே மனச்சாட்சி - கால்ரிட்ஜ்

3. பேராசைக்காக மனச்சாட்சியை இழத்தல், சாம்பலுக்காக ஓவியத்தை எரிப்பது போன்றதாகும். - சீனா

4. மனச்சாட்சி ஒரு கூடு; அதில்தான் ஒவ்வொரு நன்மையும் குஞ்சு பொரிக்கும். - வேல்ஸ்

5. ஒரு நிரபராதியைத் தண்டிப்பது, உன் மனச்சாட்சியைத் தூக்கில் போடுவது போன்றதாகும். - செக்கோஸ்லோவாகியா

6. தீமை செய்கையில் நெஞ்சில் ஒரு சாட்சி இருக்கிறான். - டென்மார்க்

7. பரிசுத்தமான மனச்சாட்சிதான் வீட்டுக்குச் சிறந்த விருந்தாளி. - செக்கோஸ்லோவாகியா

8. மாசற்ற மனச்சாட்சி இதயத்தில் உறையும் நாகம். - யூதப் பழமொழி

9. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்! - தமிழ்நாடு

10. நீ செய்யும் காரியம் என்ன நோக்கத்திற்காக என்பது உன் மனச்சாட்சிக்குத் தெரியும். - இந்தியா

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #3 on: June 09, 2014, 08:25:34 PM »
பொன்மொழிகள்...




* அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான்.

* கடமையை ஒழுங்காய் செய்தாலே கடவுளைக் காணலாம்.

* திட்டமில்லாத செயல் யாவும் நஷ்டமே.

* பிறரிடம் அன்பு செலுத்தி உங்களை துய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

* பக்தி மிகுதியாவதற்குத் தியானம் அதிகம் செய்ய வேண்டும்.

* கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதி எதிர்பாக்கக் கூடாது

* நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை

* பயப்படுத்துபவனும், பயத்தை போக்குபவனும் இறைவனே

* முன்னேற்றம் என்பது நமது கைகளில்தான் இருக்கிற‌து

* சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பமும் சீரழிந்துவிடும்

* மரமானது அதன் கனியைக் கொன்டு அறியப்படுகிறது

* மகிழ்ச்சியும் உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பன‌

* அடக்கம் தான் வெற்றிக்குச் சாவி

* கற்றவன் அதை விட்டுவிடக் கஷ்டப்படுவான்

* அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர்

* விடாமுயற்சியுடையவன் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்

* எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்

* ஒரு நல்ல காரியத்தில் எப்போதும் உற்சாகத்துடன் ஈடுபட்டிருப்பது நல்லது

* நம்பிக்கைதான் சாதனைக்கு அடிப்படை

* பாதையை சரியாய் போட்டால் பயணம் சுபமாக இருக்கும்

* பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்க்கு முன்பே யோசனை செய்.

* நண்பர்களைப் போலவே தேர்ந்தெடுத்த சில நூல்களே தேவை.

* உடலுக்கு ஏற்படும் நன்மை, தீமை ஆத்மாவிற்குக் கிடையாது.

* வாழ்க்கையின் உயர்வு உன் நாக்கின் நுனியில் இருக்கிற‌து.

* சிக்க‌ன‌ம்தான் பெரிய‌ வ‌ருமான‌மாகும்.

Offline MysteRy

~ பொன்மொழிகள்... ~
« Reply #4 on: June 29, 2014, 09:19:53 PM »
பொன்மொழிகள்...




1. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. -ஹெலன் கெல்லர்.

2. நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா? -அன்னை தெரசா.

3. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
-அம்பேத்கர்.

4. வீரன் ஒரு முறைதான் சாகிறான். கோழை ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டேயிருக்கிறான். -ஷேக்ஸ்பியர்.

5. கல்வியின் வேரானது கசக்கும். ஆனால் அதன் விளைச்சல் இனிக்கும். -அரிஸ்டாட்டில்.

6. சோம்பல் மாவீரனையும் வீழ்த்திவிடும். - பார்ட்டன்.

7. பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம். - ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

8. ஊக்கத்தைக் கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. -அண்ணா.

9. கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும். -குருநானக்.

10. உயர்ந்த எண்ணங்களை உடையார் ஒரு நாளும் துன்பம் அடையார். - காந்தியடிகள்.

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #5 on: July 03, 2014, 08:12:45 PM »
பொன்மொழிகள்!




1. உழைப்பின்றி உயர்பவர்களைத் திருடர்கள் என்றுதான் கூற வேண்டும். -காந்தி

2. உனது அறிவையும் ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள். -சாக்ரடீஸ்

3. மனோதைரியம் இல்லையேல் வாய்மை இல்லை. -மில்டன்

4. உழைப்பு என்றும் வீண்போகாது; உழைப்பிற்குத் தகுந்த பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.
-நெப்போலியன் ஹில்

5. ஒரு தவறு செய்தபிறகு அதைத் திருத்தாதவன், இன்னொரு தவறு செய்தவனாவான்.
-கன்பூஸியஸ்

6. மனிதனின் ஆசைகள் எப்போதும் குறைவதில்லை. அது மனத்தின் பசி. -காண்டேகர்

7. எது நேர்மையான பாதையைக் காட்டுகிறதோ அதுவே உண்மையான அறிவு. -ஜேம்ஸ் ஆலன்

8. சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நேரத்தை மிச்சப்படுத்துவது ஆகும். -பேகன்

9. நீயும் வாழு; பிறரையும் வாழ விடு. இதுவும் அகிம்சையின் தத்துவம்தான். -மகாவீரர்

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #6 on: July 13, 2014, 07:42:21 PM »
பொன்மொழிகள்...




1.பார்ப்பது ஞானமே தவிர கண்களல்ல; தீய செயல்களிலிருந்து விலகுவதே உண்மையான அறிவாகும்! - பஞ்சதந்திரம்

2.நல்ல நம்பிக்கையின்றி நல்ல அறிவு உண்டாகாது; நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கம்
உண்டாகாது! - மகாவீரர்

3.நல்லறிவானது எந்த மூலையில் எவ்வளவு தூரத்திலிருந்த போதிலும் அதைத் தேடிச் செல்!
- முகமது நபி

4.குறைந்த அறிவை நன்முறையில் பயன்படுத்துவதே எல்லையிலாப் பெருமை சேர்க்கும்!
- கலீல் கிப்ரான்

5.அனுபவம் இல்லாத அறிவு பயனற்றுப் போகும்! - கன்ஃபூசியஸ்

6.தன்னிலே தன்னைக் காண்பதே அறிவு! - சாக்ரடீஸ்

7.அறியாமை ஆண்டவனின் சாபம்; அறிவு தேவர் உலகத்துக்குக் கொண்டு செல்லும் சிறகு!
- ஷேக்ஸ்பியர்

8.அறிவை அடையாது இருப்பவன் பெரும் துன்பமடைவான்! - கார்லைல்

9.அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லாதே; ஆன்மா ஆணையிடும் வழியில் செல்!
- டால்ஸ்டாய்

10.கண் பார்வை மூலம் சிறந்த பொருளை எடுப்பது போல பகுத்தறிவு மூலம் சிறந்த கருத்துகளை அறியலாம்! - அரிஸ்டாட்டில்

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #7 on: July 14, 2014, 08:36:14 PM »
பொன்மொழிகள்...



1. திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை! - தாமஸ் ஆல்வா எடிசன்

2. ஐயம், தாழ்வுமனப்பான்மை இரண்டும் நம்பிக்கையின் எதிரிகள். - ஹோடிஸ் கார்ட்டர்

3. வாழ்வாகிய ஆடையில் எப்போதும் இருவகை நூல்கள் இருக்கும். அவை நன்மை, தீமை இரண்டுமே! - காண்டேகர்

4. வாழ்க்கையிலே இரு பகுதிகள் உண்டு. கடந்த காலம் ஒரு கனவு; வருங்காலம் ஒரு பெருமூச்சு! - அரேபியா நாட்டுப் பழமொழி

5. வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிரந்தரமானவை இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். - ஜார்ஜ் சந்தாயானா

6. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்! - ஜார்ஜ் ஹெர்பர்ட்

7. ஞானமில்லாத அறிவு, அன்பு இல்லாத மனம் இவை இரண்டும் உடைந்து போன சிலைக்குச் சமம்! - ஸ்ரீ குருஜி சுராஜானந்தா

8. சொந்தக்காரியம், பொதுக்காரியம் இரண்டையும் நேர்மையாகவும் திறமையாகவும் செய்யக் கற்றுத் தருவதே பரிபூரணக் கல்வி! - மில்டன்

9. அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள் போன்றவை! - கார்னியேஜ்

10. தர்மம், நீதி இரண்டும் சேர்ந்து பண்பு உண்டாகின்றது! - காஞ்சிப் பெரியவர்

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #8 on: August 20, 2014, 07:49:39 PM »
பொன்மொழிகள்...




1.வாழ்வு நெடுகக் கற்க வேண்டுமென்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதே கல்வியின் நோக்கம். -ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

2.சாகும் வரையிலும் ஒருவனது கல்வி நிறைவு பெறுவதில்லை. - ராபர்ட் லீ

3.கூர்த்த மதி நூறு கைகளை விடவும் வலுவானது. - தாமஸ் ஃபுல்லர்

4.மதி விதியை வெல்லும். - எமர்சன்

5.உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்.

6.வாழ்க்கை என்பது ஊக்கம்; ஊக்கம் வலிமை தரும். - ஃப்ரெடரிக் நீட்ஷே

7.பேசும் பொழுது தெரிந்ததைச் சொல்கிறீர்கள்; கேட்கும்பொழுது தெரியாததைத் தெரிந்து கொள்கிறீர்கள். - ஜேரட் ஸ்பார்க்ஸ்

8.திறமையுடன் பணிவும் கொண்டவனை மக்கள் மதிக்கிறார்கள். - ஜேம்ஸ் ஏஜீ

9.பணிவு இல்லாமல் பிற நலன்களைப் பெற்றுப் பயன் என்ன? - எராஸ்மஸ்

10.ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் அவனது பணிவு.

Offline MysteRy

Re: ~ பொன்மொழிகள்... ~
« Reply #9 on: September 13, 2014, 08:01:42 PM »
பொன்மொழிகள் .....



* மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. -நபிகள் நாயகம்.

* உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்- கலாம்.

* தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். -சிம்மன்ஸ்.

* உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.

* நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம். -அன்னை தெரசா.

* மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. -சாணக்கியர்.

* நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.

* உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. -வோல்டன்.

* அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.

* உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்.

* சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை - யாரோ.

* உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.

* நம்பிக்கைக்குரிய நணபருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை.

* இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது.

* அடுத்த விளக்கிற்கு ஒளி ஏற்ற உதவுவதால், விளக்கின் ஒளி எவ்வகையிலும் குறைவதேயில்லை - எரின் மேஜர்ஸ்.

* நான் தோல்வியுறவில்லை; மாறாக நான் கண்டுபிடித்த 10,000 வழிமுறைகளில் எதுவும் சரியில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்.

* வாயைத் திறந்து பேசாத வரை ஒவ்வொரு மனிதரும் அறிவாளிகளே - ஆனென்.