பொன்மொழிகள்...

1. திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை! - தாமஸ் ஆல்வா எடிசன்
2. ஐயம், தாழ்வுமனப்பான்மை இரண்டும் நம்பிக்கையின் எதிரிகள். - ஹோடிஸ் கார்ட்டர்
3. வாழ்வாகிய ஆடையில் எப்போதும் இருவகை நூல்கள் இருக்கும். அவை நன்மை, தீமை இரண்டுமே! - காண்டேகர்
4. வாழ்க்கையிலே இரு பகுதிகள் உண்டு. கடந்த காலம் ஒரு கனவு; வருங்காலம் ஒரு பெருமூச்சு! - அரேபியா நாட்டுப் பழமொழி
5. வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிரந்தரமானவை இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். - ஜார்ஜ் சந்தாயானா
6. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்! - ஜார்ஜ் ஹெர்பர்ட்
7. ஞானமில்லாத அறிவு, அன்பு இல்லாத மனம் இவை இரண்டும் உடைந்து போன சிலைக்குச் சமம்! - ஸ்ரீ குருஜி சுராஜானந்தா
8. சொந்தக்காரியம், பொதுக்காரியம் இரண்டையும் நேர்மையாகவும் திறமையாகவும் செய்யக் கற்றுத் தருவதே பரிபூரணக் கல்வி! - மில்டன்
9. அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள் போன்றவை! - கார்னியேஜ்
10. தர்மம், நீதி இரண்டும் சேர்ந்து பண்பு உண்டாகின்றது! - காஞ்சிப் பெரியவர்