Author Topic: தாய்மைக்கு தலைவணங்குவோம்  (Read 468 times)

Offline thamilan

உன்னைத் தவிர
வேறு எண்ணம் இல்லை
உன்னைத் தவிர
வேறு யாரும் மனதில் இல்லை என
காதலிடம் சொலி விட்டு
அவள் நினைவாக நடந்த காதலன்
கால்தடுக்கி விழுந்த போது
சொன்ன வார்த்தை
' அய்யோ அம்மா ' !!!

காதலுக்கும் தாய்மைக்கும்
அடிப்படை அன்பு தான் - ஆனால்
காதல் நாடித்துடிப்பு 
தாய்மை உயிர்த்துடிப்பு
எதிர்ப்பார்புகள் நிறைந்தது காதல்
எதையும் எதிபார்க்காதது தாய்மை

நம் இளமை துடிப்பது
காதல் காதல் என்று
நம் இதயம் துடிப்பது
அம்மா அம்மா என்று
தாய்மைக்கு தலைவணங்குவோம்