உன்னைத் தவிர
வேறு எண்ணம் இல்லை
உன்னைத் தவிர
வேறு யாரும் மனதில் இல்லை என
காதலிடம் சொலி விட்டு
அவள் நினைவாக நடந்த காதலன்
கால்தடுக்கி விழுந்த போது
சொன்ன வார்த்தை
' அய்யோ அம்மா ' !!!
காதலுக்கும் தாய்மைக்கும்
அடிப்படை அன்பு தான் - ஆனால்
காதல் நாடித்துடிப்பு
தாய்மை உயிர்த்துடிப்பு
எதிர்ப்பார்புகள் நிறைந்தது காதல்
எதையும் எதிபார்க்காதது தாய்மை
நம் இளமை துடிப்பது
காதல் காதல் என்று
நம் இதயம் துடிப்பது
அம்மா அம்மா என்று
தாய்மைக்கு தலைவணங்குவோம்