Author Topic: ~ 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி! ~  (Read 1708 times)

Offline MysteRy

காஷ்மீரி ரிச் புலாவ்



தேவையானவை:
வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம்
கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு
டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான
அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு  -
தேவைக்கேற்ப.

செய்முறை:
 பாலில்
குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில்
எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி,
உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய
வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து
வதக்கி... வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை
சேர்த்துக் கிளறி இறக்கினால்... காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!

Offline MysteRy

டெல்லி தர்பார்



தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - 50 கிராம், முந்திரி, பாதாம் - தலா 10, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பாதாம்,
முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் சர்க்கரை சேர்த்து
மிக்ஸியில் பொடிக்கவும். மைதா மாவை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர்
விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக
செய்து, சிறிய அப்பளங்களாக இட்டு, நடுவே பாதாம் - முந்திரி பொடியை வைத்து
மூடி, ஓரத்தை நன்கு ஒட்டவும். இதனை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

மைசூர் சட்னி பொடி



தேவையானவை:
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது
விருப்பத்துக்கேற்ப), தேங்காய் துருவல் - ஒரு கப், எள் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், கசகசா - சிறிதளவு,  கறிவேப்பிலை - 10 இலைகள், புளி -
கொட்டைப் பாக்கு அளவு, தனியா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துருவலை, வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். கசகசா, எள்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தனியா, புளி ஆகியவற்றையும்
எண்ணெய் விடாமல் தனித்தனியே கருகாமல் வறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு
டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து... பெருங்
காயத்தூள், உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.


இது, சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடியுடன் நீர் சேர்த்துக் கரைத்து, சட்னி போலவும் பயன்படுத்தலாம்.
« Last Edit: February 24, 2014, 09:31:29 AM by MysteRy »

Offline MysteRy

பாம்பே காஜா



தேவையானவை:
மைதா
- ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை -
ஒரு கப், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் - சிறிதளவு, நெய் -
கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

அகலமான
பாத்திரத்தில் சிறிதளவு நெய்யுடன் ஆப்பசோடா சேர்த்து தேய்த்து, சலித்த
மைதா சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும்.
வேறொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் நெய் சேர்த்து பேஸ்ட் போல குழைக்கவும்.
பிசைந்த மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி அப்பளமாக திரட்டி, ஒவ்வொன்றின்
மீதும் அரிசி மாவு பேஸ்ட் தடவி முக்கோணமாக மடிக்கவும். காஜா தயார்.


எண்ணெயைக் காய வைத்து, காஜாக்களை பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையுடன் கேசரி கலர் சேர்த்து பாகு செய்து, பொரித்த காஜாக்களை முக்கி
எடுத்து, தட்டில் வைத்து, அதன் மீது கொப்பரைத் துருவலை தூவி அலங்கரித்து
பரிமாறவும்.

Offline MysteRy

பாம்பே சட்னி



தேவையானவை:
கடலை
மாவு - 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சித்
துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன், மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,
கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி,
கரைத்த கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியானதும்
இறக்கவும். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

Offline MysteRy

ஆந்திரா ரைஸ் பால்ஸ்



தேவையானவை:
அரிசி
மாவு - ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.

செய்முறை:
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசி மாவுடன்
சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும். பிறகு, இதனுடன் எள்,
சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு
வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். ஒரு மணி
நேரம் ஊறவிட வும். பின்னர், சீடை போல உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து
எடுக்கவும்.

குறிப்பு:
இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

Offline MysteRy

நெல்லூர் மசாலா ரைஸ்



தேவையானவை:
அரிசி - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
எள் - 2 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), லவங்கம் - ஒன்று.

செய்முறை:
அரிசியை
சாதமாக வடித்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள அனைத்தையும்
வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக
நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி... உப்பு,
மஞ்சள்தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
இந்த மசாலாவுடன் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால்... நெல்லூர்
மசாலா ரைஸ் ரெடி!

Offline MysteRy

ராஜஸ்தானி கட்டா கிரேவி



தேவையானவை:
கடலை
மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - ஒரு
சிட்டிகை, புளித்த தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம், கறிவேப்பிலை -
தாளிக்கத் தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்),
கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.

செய்முறை:

கடலை
மாவுடன் பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு,  தண்ணீர்
சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக்கி பொரித்து எடுக்கவும். இது
தான் கட்டா.


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, சீரகம்
தாளித்து... பொரித்த கட்டா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்
தழை, தனியாத்தூள், தயிர், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து... ஒரு
கொதிவிட்டு இறக்கவும்.

Offline MysteRy

மங்களூர் ஸ்வீட் பன்



தேவையானவை:
கோதுமை
மாவு - ஒரு கப், பச்சை வாழைப்பழம் - ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், சர்க்கரை -
2 டீஸ் பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் -
பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாழைப்பழத்தை
தோலை உரித்து, துண்டுகளாக்கி மசிக்க வும். இதனுடன் தயிர், உப்பு,
சர்க்கரை, சீரகம், ஆப்பசோடா சேர்த்துக் கிளறவும். பிறகு, கோதுமை மாவில்
இந்தக் கல வையை சேர்த்து, சிறிதளவு எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசையவும்.
இந்த மாவு கலவையை நான்கு மணி நேரம் ஊறவிடவும். பின்பு மாவை சிறிய
உருண்டைகளாக்கி... வட்டமாக, சற்று கனமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து
எடுக்கவும்.

Offline MysteRy

துவாரகா லட்டு



தேவையானவை:
சப்பாத்தி - 2, வறுத்த வேர்க்கடலை - அரை கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய்
துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சப்பாத்தியை சிறிய
துண்டுகளாக வெட்டவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலை,
சப்பாத்தி துண்டுகள், வெல்லம் சேர்த்துப் பொடிக்கவும். கையில் சிறிதளவு
நெய் தடவிக்கொண்டு, அரைத்த பொடியை லட்டுகளாக பிடிக்கவும்.

Offline MysteRy

காசி அல்வா



தேவையானவை:
வெள்ளைப் பூசணி துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், முந்திரிப் பருப்பு - 10, நெய் - கால் கப்.

செய்முறை:
வெள்ளைப்
பூசணியை தோல் சீவி, விதைகளை நீக்கி, கேரட் துருவியில் மெல்லிய தாக
துருவவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு இதை வதக்கவும்.
இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டி யாகும்போது மீதமுள்ள
நெய் விட்டு கிளறி, சுருண்டு வரும்போது இறக்க வும். முந்திரிப் பருப்புகளை
நெய்யில் வறுத்து மேலே அலங்கரித்து பரிமாற வும்.

Offline MysteRy

பஞ்சாபி பாலக்



தேவையானவை:
பாசிப்பருப்பு
- ஒரு கப், தயிர் - 2 டீஸ்பூன், பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு,
வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை
மலர வேகவிடவும். பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக்
காயவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, சுத்தம்
செய்து துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி... உப்பு, பாசிப்பருப்பு
சேர்த்து வேகவிடவும். பின்பு, தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும். இது
சப்பாத்திக்கு சிறந்த சைட் டிஷ்.

Offline MysteRy

பெங்காலி ஆலு மசாலா



தேவையானவை:
உருளைக்கிழங்கு
- கால் கிலோ, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  ஏலக்காய், பட்டை - தலா
ஒன்று, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம், தக்காளி - தலா
2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள்
- ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை
வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை,
தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப்
பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது,
வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தயாராக வைத்திருக்கும் மசாலா பொடி
சேர்த்து வதக்கி... உப்பு, பொரித்த உருளை துண்டுகள், தயிர் சேர்த்து சுருள
கிளறி இறக்கி, பரிமாறவும்.

Offline MysteRy

கேரள நேந்திரன் சாக்லேட்



தேவையானவை:
நேந்திரன் வாழைப்பழம் (மசித்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப்.

செய்முறை:
தேங்காய்
துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை கம்பி
பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், மசித்த
நேந்திரன் பழ விழுது, தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கெட்டியாகும்
வரை கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி,
ஆறியவுடன் வில்லைகளாக்கி பரிமாறவும்.

Offline MysteRy

மணப்பாறை முறுக்கு



தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் -
கால் டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி
மாவுடன் வெண்ணெய் (அ) நெய், உப்பு, எள், சீரகம், பெருங்காயத்தூள், ஓமம்,
தேவையான அளவு தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும். பிசைந்த மாவை
தேன்குழல் முறுக்கு அச்சு தட்டில் போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்காக
பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.