Author Topic: ~ 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி! ~  (Read 1709 times)

Offline MysteRy

குஜராத்தி கடீ



தேவையானவை:
கெட்டித் தயிர் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு
சிட்டிகை, கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்த
மல்லித் தழை - சிறிதளவு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிள காய் - 3,
இஞ்சி - சிறிய துண்டு, எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சி,
பச்சை மிள காயை சேர்த்து விழுதாக அரைக்க வும். கெட்டித் தயிருடன் அரைத்த
விழுது, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, கடலை மாவு சேர்த்து நன்கு கரைக்க
வும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து,
கரைத்த தயிர் கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சுத்தம் செய்த
கொத்தமல்லித் தழையை சேர்க்கவும்.


சப்பாத்தி, பராத்தா வகைகளுக்கு இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

Offline MysteRy

ஒடிசா சுகர் பிஸ்கட்



தேவையானவை:
அரிசி - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை
ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை  வடியவிட்டு நிழலில் உலர்த்தவும். லேசாக
ஈரம் இருக்கும்போது இந்த அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன்
ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் விடக்கூடாது).


காற்றுப்புகாத டப்பாவில் பிசைந்த மாவை நன்கு அழுத்தி
அழுத்தி போட்டு, எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை எடுத்து ஒரு
தட்டில் கொட்டி, மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வடைகள் போல
தட்டி... கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து,
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

ஹூப்ளி ஹாட் அண்ட் ஸ்வீட் தோசை



தேவையானவை:
தோசை
மாவு - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்
துருவல், வெல்லம் - தலா கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடலைப்பருப்பு,
காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில்
வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.


வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து, கொதிக்கவிட்டு
வடிகட்டவும். தோசை மாவுடன் வெல்லக் கரைசல், அரைத்து வைத்த விழுது
சேர்த்துக் கலக்கி, தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு
வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

நெல்லை உக்காரை



தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம் -
ஒரு கப், நெய் - 5 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரி - 10.

செய்முறை:

பருப்பு
வகைகளை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து... ஒரு மணி நேரம் தண்ணீரில்
ஊற வைக்கவும். பிறகு, நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தி காயவிட்டு,
மிக்ஸியில் போட்டு ரவை போல பொடிக்கவும்.


அடிகனமான பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன்
வெல்லத்தை சேர்த்து, கரைய விட்டு வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலுடன்
ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு தக்காளி பதத்தில் பாகு காய்ச்சவும்.
இதனுடன் பருப்பு ரவையை சேர்த்து கரண்டி காம்பால் கிளறவும்.நெய்யில் வறுத்த
முந்திரியை இந்த பருப்பு கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


நெல்லையில் தீபாவளி சமயத்தில் இதைச் செய்வார்கள்.

Offline MysteRy

மராட்டி கேப்சிகம் ரைஸ்



தேவையானவை:
அரிசி
- ஒரு கப், பச்சைப் பட்டாணி - அரை கப், குடமிளகாய், தக்காளி - தலா
2,  லவங்கம், ஏலக்காய், சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, காய்ந்த
மிளகாய்  - 5, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியுடன்,
பச்சைப் பட்டாணி சேர்த்து வேகவிடவும். குட மிளகாய், தக்காளியை பொடியாக
நறுக்கவும். வாணலியில் நெய்யை காய விட்டு... லவங்கம், ஏலக்காய், சீரகம்,
காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாய், உப்பு சேர்த்து
வதக்கவும். பின்பு வடித்த சாதக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறி
இறக்கினால்... மராட்டி கேப்சிகம் ரைஸ் ரெடி!

Offline MysteRy

உடுப்பி கொத்சு



தேவையானவை:
கேரட்,
பீன்ஸ், பரங்கி துண்டுகள் சேர்த்து - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக
நறுக்கவும்), கெட்டியான புளிக் கரைசல் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், வறுத்த தேங்காய் துரு வல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4.

செய்முறை:
துவரம்பருப்பு,
சீரகம், எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து... நறுக்கிய பச்சை மிளகாய்,
வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு
எண்ணெய் விட்டு காய்கறி துண்டுகளை வதக்கி, இதனுடன் தண்ணீர் சேர்த்து வேக
வைத்து... புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொதிக்கும் காய்கறி கலவையில் அரைத்து வைத்த விழுது, வெங்காயம் சேர்த்து
மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Offline MysteRy

ஹைதராபாத் கத்திரிக்காய் கறி



தேவையானவை:
கத்திரிக்காய்
- 10, வெந்தயக்கீரை - அரை கட்டு, வெங்காயம் - 2,  கடுகு, சீரகம்,
கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, வறுத்த வேர்க்கடலை - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 6,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், கத்திரிக்காயை பொடியாக
நறுக்கவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை
தாளித்து... வெங்காயம், கத்திரிக்காய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மிளகாய் - வேர்க்கடலை பொடி, உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

கேரளா புட்டு



தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், பச்சைப் பயறு, தேங்காய் துருவல் - தலா கால் கப், நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சரிசியை
ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிய விட்டு தண்ணீர் சேர்க்காமல்
அரைக்கவும். நேந்திரன் வாழைப்பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.


அரைத்த அரிசி மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து
சிறிதளவு வெந்நீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேகவிடவும். பிறகு, வெந்த
மாவுடன் நேந்திரம்பழத் துண்டுகள், வெந்த பயறு சேர்த்துக்  கலந்து
பரிமாறவும்.


மிகவும் ஹெல்தியான புட்டு இது!

Offline MysteRy

தர்மஸ்தலா ரைஸ் லட்டு



தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
அரிசியைக்
களைந்து வெயிலில் காய வைக்க வும். வெறும் வாணலியில் இந்த அரிசியைப் போட்டு
பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலிக்கவும்.
தேங் காய் துருவலுடன், வெல்லம் சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்
தில் சலித்த அரிசி மாவு, அரைத்த தேங் காய் - வெல்லம் விழுது,
ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, லட்டுகளாக பிடிக்க வும்.

Offline MysteRy

மஹாராஷ்டிரா மல்லி வடி



தேவையானவை:
கடலை
மாவு, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப், கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான
அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 2
டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலையை பொடித்த தூள் - கால் கப், நெய் - 2
டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில்
2 டீஸ்பூன், எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சீரகம் தாளித்து... இஞ்சி -
பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, கொத்தமல்லித் தழை,
உப்பு சேர்க்கவும். கடலை மாவை நீரில் கெட்டியாக பேஸ்ட் போல் கரைத்து
இதனுடன் சேர்த்து, வேர்க்கடலைத் தூள் போட்டு நன்கு கிளறவும். கடலை மாவு
வெந்து பச்சை வாசனை போனதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின்
துண்டுகள் போடவும். இந்த துண்டுகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

செட்டிநாடு மசாலா பணியாரம்



தேவையானவை:
 பச்சரிசி
- ஒரு கப், உளுந்து - முக்கால் கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக
நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித்
தழை - கால் கப், பச்சை மிளகாய் - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி ஊற வைக்கவும். வெங்காயம்,
கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும். முதலில் உளுந்துடன் பச்சை மிளகாய்
சேர்த்து, தண்ணீர் அதிகம் விடாமல்  கெட்டியாக அரைக்கவும். பிறகு, அரிசியை
தனியாக கெட்டியாக அரைக்கவும்.


வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு
சேர்த்து, நன்கு வெடித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த அரிசி மாவு, உளுந்து மாவு, வதக்கிய வெங்காய கலவை,
கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து, சற்று தளர்வாக பிசையவும். மாவை காய்ந்த
எண்ணெயில் போண்டா போல கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
கடுகு
நன்கு வெடிக்காவிட்டால், பணியாரம் எண்ணெயில் போடும்போது வெடிக்கும்.
உளுந்துக்கு தண்ணீர் அதிகம் விட்டு அரைத்தால், எண்ணெயைக் குடிக்கும்.

Offline MysteRy

கூர்க் பென்னி கடுபு



தேவையானவை:
அரிசி
ரவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன்,  தேங்காய் துருவல் - கால் கப்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயம் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
அடி
கனமான வாணலியில் வெண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம்,
உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு
சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரிசி ரவை, தேங்காய் துருவல்,
கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்த பின் இறக்கி
ஆறவிடவும். இந்தக் கலவையை பந்து போல உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுத்து
பரிமாறவும். இதற்கு ஏதாவது ஒரு வகை சட்னி தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு:
பச்சரிசியை மிக்ஸியில் சின்ன ரவையாக உடைத்து பயன்படுத்த வும்.

Offline MysteRy

சேலம் மாங்காய் சட்னி



தேவையானவை:
மாங்காய்
- ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு மூடி, உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6 (அல்லது விருப்பத்துக்கேற்ப), பெருங்காயத்தூள், கடுகு -
தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில்
2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுக்கவும்.
மாங்காயைக் கழுவி கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளாக்கவும். வறுத்த
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயுடன்... மாங்காய், தேங்காய் துருவல், உப்பு
சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில்
கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.


இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

Offline MysteRy

சாத்தூர் சேவ்



தேவையானவை:
அரிசி
மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிதளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு
- தேவையான அளவு.

செய்முறை:
அரிசி
மாவு, கடலை மாவுடன்... எள், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், மிள
காய்தூள், காய்ச்சிய எண் ணெய் 4 டீஸ்பூன் சேர்த்துப் பிசிறவும். பிறகு,
தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். எண் ணெயைக் காய வைக்கவும். மாவை
காராசேவ் கரண்டியில் போட்டு, சூடான எண்ணெயில் விழும்படி அழுத்தி
தேய்க்கவும். பொன்னிற மானதும் எடுக்கவும். அல்லது, மாவை காராசேவ் அச்சில்
போட்டு எண்ணெயில் பிழிந்தும் எடுக்கலாம்.

Offline MysteRy

கன்னியாகுமரி கறுப்பு உளுந்து சாதம்



தேவையானவை:
அரிசி
- ஒரு கப், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல் - தலா அரை கப், பூண்டு - 4
பல், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசி, உளுந்தை களைந்து தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.


இதனுடன் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை
மிளகாய் சேர்த்துக் கிளறவும். இந்த சாதத்தை சூடாக தேங்காய் (அ) எள்
துவையலுடன் பரிமாறவும்.