Author Topic: இணையில்லா இணையதளம்  (Read 470 times)

Offline தமிழன்

இணையில்லா இணையதளம்
« on: February 20, 2014, 09:51:41 PM »
FTC என்றொரு இணையதளம், அது
இணையில்லா தளம்
இன்புறவைப்பதில் இனியதளம்

முகம் தெரியாவிட்டாலும்
நல்அகம் காட்டும் நண்பர்கள்
இன்சொல் பேசி
இன்புறவைக்கும் நண்பிகள்
வஞ்சகம் இல்லாமல்
வாய்விட்டு சிரிக்கவைத்திடும்
விகடகவிகள்
எட்டிப் போனாலும்
விட்டுப் போகாமல்
விரட்டிப் பிடிக்கும்
கடலை மன்னர்கள்
ஒரு குடும்பம் என்பதா?
இல்லை............

காதல் பெருக்கெடுக்கையில்
என்னை கவிஞனாக்கிய ..........
தூங்கிக் கிடந்த என்
சிந்தனைதனை
தூசுதட்டி சிந்தனையாளன் ஆக்கிய ......
சாப்பிட்டே பழக்கப்பட்ட எனை
சமையல்காரனாக்கிட்ட ...........
 
இரும்பாக இருந்த என்னை
குறும்பாக பேசி
சிரிக்கவும் சொல்லித்தந்த
வாதங்கள் பண்ணிப் பழக்கப்பட்ட எனை
விவாதிக்கவும் சொல்லித்தந்த
சோகராகம் மட்டுமே
கேட்டுப் பழகிய எனக்கு
இன்னிசை நாதங்களையும்
அள்ளித்தந்த
பல்கலைக்கழகம் என்பதா

FTC எனும் ஆலமரமே
உன்கிளைகள் எங்கும்
விரிந்து பரவட்டும்
உன்வேர்கள் தமிழர்களின்
இதயமெங்கும் பரவட்டும்
உனை தாங்கும் விழுதுகளாக
நாங்கள் தோள்கொடுப்போம்

Offline PiNkY

Re: இணையில்லா இணையதளம்
« Reply #1 on: February 21, 2014, 12:56:23 AM »
Somali super uh irku poem.. nala fl pani elthrka vaarthaigala krothu :) supr oh super

Offline NasRiYa

Re: இணையில்லா இணையதளம்
« Reply #2 on: February 22, 2014, 12:02:27 AM »
எட்டிப் போனாலும்
விட்டுப் போகாமல்
விரட்டிப் பிடிக்கும்
கடலை மன்னர்கள்

 -----  ஹஹஹ இனிமேல் உங்களுக்கு தமிழன் என்ற பெயரை காட்டிலும்  கடலை மன்னன்  என்ற பொருந்தும்

டமால் என்ன இது, இப்படி கலக்கறீங்க? இந்த கவிதைத் தொகுப்பை நான் இப்பதான் கவனிச்சேன். இத்தனை திறமையை வெச்சுட்டு Chatla ரொம்ப அடக்கமா பேசறீங்க.
ஆச்சரியமா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு எல்லா கவிதையும் :D

Offline ammu

Re: இணையில்லா இணையதளம்
« Reply #3 on: February 22, 2014, 01:08:00 PM »
தமிழன்  மிகவும்  அருமையான  படைப்பு 
வாழ்த்துகள் 

Offline தமிழன்

Re: இணையில்லா இணையதளம்
« Reply #4 on: February 22, 2014, 02:33:16 PM »
பின்கி, நஸ்ரியா, அம்மு உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்