FTC என்றொரு இணையதளம், அது
இணையில்லா தளம்
இன்புறவைப்பதில் இனியதளம்
முகம் தெரியாவிட்டாலும்
நல்அகம் காட்டும் நண்பர்கள்
இன்சொல் பேசி
இன்புறவைக்கும் நண்பிகள்
வஞ்சகம் இல்லாமல்
வாய்விட்டு சிரிக்கவைத்திடும்
விகடகவிகள்
எட்டிப் போனாலும்
விட்டுப் போகாமல்
விரட்டிப் பிடிக்கும்
கடலை மன்னர்கள்
ஒரு குடும்பம் என்பதா?
இல்லை............
காதல் பெருக்கெடுக்கையில்
என்னை கவிஞனாக்கிய ..........
தூங்கிக் கிடந்த என்
சிந்தனைதனை
தூசுதட்டி சிந்தனையாளன் ஆக்கிய ......
சாப்பிட்டே பழக்கப்பட்ட எனை
சமையல்காரனாக்கிட்ட ...........
இரும்பாக இருந்த என்னை
குறும்பாக பேசி
சிரிக்கவும் சொல்லித்தந்த
வாதங்கள் பண்ணிப் பழக்கப்பட்ட எனை
விவாதிக்கவும் சொல்லித்தந்த
சோகராகம் மட்டுமே
கேட்டுப் பழகிய எனக்கு
இன்னிசை நாதங்களையும்
அள்ளித்தந்த
பல்கலைக்கழகம் என்பதா
FTC எனும் ஆலமரமே
உன்கிளைகள் எங்கும்
விரிந்து பரவட்டும்
உன்வேர்கள் தமிழர்களின்
இதயமெங்கும் பரவட்டும்
உனை தாங்கும் விழுதுகளாக
நாங்கள் தோள்கொடுப்போம்