உன்பெயரை உன்பெயரை
உச்சரிக்க மாட்டேனா
கண்ணுக்கு இமையாகி
கண்சிமிட்டும் போதெலாம்
கண்தடவி சிருங்காரம்
செய்யாமல் போவேனா
மின்மினி பூச்சிகளை
மெல்லப் பிடித்துவந்து
கன்னத்தில் ஒட்டவைத்து
கைதட்டி சிரித்திடமாட்டேனா
உலகத்துக் கவிகளிடம்
ஒவ்வோர் வரிவாங்கி
கட்டழகி உனஅழகை
கவிபாடிட மாட்டேனா
சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் என்றாலும்
தேவதையே உன்மடியில்
தலை சாய்திடமாட்டேனா
சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகி உனை
கூப்பிடவே மாட்டேனா