Author Topic: உன்பெயரை உச்சரிக்கும் போதெல்லாம்  (Read 908 times)

Offline தமிழன்

உன்பெயரை உன்பெயரை
உச்சரிக்க மாட்டேனா

கண்ணுக்கு இமையாகி
கண்சிமிட்டும் போதெலாம்
கண்தடவி சிருங்காரம்
செய்யாமல் போவேனா

மின்மினி பூச்சிகளை
மெல்லப் பிடித்துவந்து
கன்னத்தில் ஒட்டவைத்து
கைதட்டி சிரித்திடமாட்டேனா

உலகத்துக் கவிகளிடம்
ஒவ்வோர் வரிவாங்கி
கட்டழகி உனஅழகை
கவிபாடிட மாட்டேனா

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் என்றாலும்
தேவதையே உன்மடியில்
தலை சாய்திடமாட்டேனா

சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகி உனை
கூப்பிடவே மாட்டேனா
 

Offline Maran

Superb Kavithai     Nice lines..

Offline தமிழன்

நன்றி maran

Offline sameera


Offline தமிழன்

nanbargalukidail thanks kudathu enru sonenga sameera. irunthaalun thanks