Author Topic: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~  (Read 2602 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #15 on: December 20, 2013, 06:07:32 PM »
மகிழம்பூ முறுக்கு



தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 4 கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7, வெண்ணெய் - சிறிதளவு, எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் காய்ந்த மிளகாய், பெருங் காயம், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, தண்ணீரில் சுத்தம் செய்த எள் மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவை மகிழம்பூ அச்சில் (கடைகளில் கேட்டால் கிடைக்கவும்) போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #16 on: December 20, 2013, 06:08:45 PM »
தட்ட வடை



தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி  - ஒரு கப், பச்சரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு -  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து, சலிக்கவும். புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, மாவுடன் சேர்த்து, பொடித்த உளுத்தம் பருப்பு, எள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிது சூடான எண் ணெய் சேர்த்துப் பிசைந்து, கையில் எண்ணெய் தொட்டு, கொஞ்சம் மாவை எடுத்து வாழை இலையில் வைத்து லேசாக தட்ட வும். தட்டியவற்றை வெள்ளை காட் டன் துணியில் போட்டு, 5 நிமிடம் கழித்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
« Last Edit: December 20, 2013, 06:12:36 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #17 on: December 20, 2013, 06:10:46 PM »
இட்லி சாம்பார்



தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப், உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு (சேர்த்து) - ஒரு கப், புளிக்கரைசல் - கால் கப் (கெட்டியாக இருக்கக் கூடாது), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

வறுக்க:
தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங் காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண் ணெய் - சிறிதளவு.

செய்முறை: 
துவரம்பருப்பைக் கழுவி, அதனுடன் காய்களை சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான தண் ணீர் விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த துவரம் பருப்பு, காய்களுடன் புளிக்கரைசல், அரைத்த விழுது சேர்த்து... தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து, நல்ல மணம் வந்தபின் இறக்கி, நறுக் கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
குறிப்பு: இந்த சாம்பார் ரொம்ப கெட்டியாக இருக்கக் கூடாது. விருப்பப் பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #18 on: December 20, 2013, 06:14:36 PM »
தேங்காய் போளி



தேவையானவை:
 கோதுமை மாவு - ஒரு கப், மைதா - 3 டீஸ்பூன், நல் லெண்ணெய் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு, வாழைப் பழம் - ஒன்று.

பூரணத்துக்கு:
தேங்காய் துருவல் - 2 கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: 
கோதுமை மாவு, மைதாவுடன் தேவையான தண்ணீர்  சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசையவும். பிறகு அதன் மேல் கால் கப் நல்லெண்ணெய் விட்டு 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங் காய் துருவல், ஏலக்காய்த்தூளை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும். இதனை அப்படியே கடாயில் போட்டு, இதில் உள்ள நீர் சுண்டும் வரை வறுக்கவும். ஆறியவுடன் உருண்டை களாக உருட்டவும்.
மேல் மாவு சிறிது எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து கைகளால் பரவலாக தட்டி, அதில் பூரண உருண்டை வைத்து மூடி, அப்படியே தோசை வடிவத்தில் போளியாக தட்ட வும். சூடான தோசைக்கல்லில் போளி யைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசைத்திருப்பியால்  எடுத்து... அதன் மேல் நறுக்கிய வாழைப்பழம், நெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #19 on: December 20, 2013, 06:16:07 PM »
ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், சலித்த கடலை மாவு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: 
இட்லி புழுங்கல் அரிசி, துவரம்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த உடனேயே அதனுடன் கடலை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வாழைக்காயை மெலிதாக சீவி மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ். சோடா உப் புக்கு பதில் ஒரு சிறிய கரண்டி அளவு தோசை மாவு சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #20 on: December 20, 2013, 06:17:54 PM »
வறுத்து அரைத்த தேங்காய் சட்னி



தேவையானவை:
தேங்காய் துருவல் (இளம் தேங்காய் துருவல் வேண்டாம்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்கவும். இவை சற்று சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக  வறுக்கவும். பிறகு, ஆற வைத்து இதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைஸாக அரைக்கவும்.

குறிப்பு:
இது ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. தண்ணீர் விடாமல் அரைத்தால், வெளியூர் பயணத்துக்கு புளி சாதம், இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். தேங்காய் துரு வலை, பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது அவசியம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #21 on: December 20, 2013, 06:19:22 PM »
திடீர் மாங்காய் சட்னி



தேவையானவை:
கிளிமூக்கு மாங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
மாங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #22 on: December 20, 2013, 06:20:46 PM »
கத்திரிக்காய் கடைசல்



தேவையானவை:
பெரிய கத்திரிக்காய், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புளிக்கரைசல் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
கத்திரிக்காயை சுட்டு தோலுரித்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் உப்பு,
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்க விட வும். பிறகு கீழே இறக்கி, மசித்த கத்திரிக்காய் சேர்த்து மத்தினால் கடைந்து, மேலே நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி பரி மாறவும்.
இது இட்லி, தோசைக்கு ஏற்ற சை டிஷ். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #23 on: December 20, 2013, 06:22:05 PM »
தக்காளி புளி பஜ்ஜி



தேவையானவை:
நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், கத்திரிக்காய்,  பீர்க்கங் காய் (சேர்த்து) - ஒரு கப்,  புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெங் காயம், ஒன்று, பச்சை மிளகாய் - 2 அல்லது 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிள காயை வதக்கி, பிறகு தக் காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய உருளைக் கிழங்கு, கத்திரிக்காய், கேரட், பீர்க்கங்காய் சேர்த்து மேலும் வதக்கி... புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் மத்தால் நன்கு கடையவும்.
இது இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவற்றுக்கு ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #24 on: December 20, 2013, 06:23:34 PM »
முருங்கைக்காய்  பலாக்கொட்டை குழம்பு



தேவையானவை:
மாங்காய், முருங்கைக்காய்  - தலா ஒன்று, பலாக்கொட்டை - 10 அல்லது 15, வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை: 
பலாக்கொட்டையைச் சிறிய கல்லினால் தட்டி தோல் எடுத்துவிட்டு வேக வைக்கவும். முருங்கைக்காய், மாங்காயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். முருங்கைக்காய், மாங்காய் துண்டுகளுடன் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
வேக வைத்த பலாக்கொட்டை, முருங்கைக்காய், மாங்காயுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்தும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #25 on: December 20, 2013, 06:25:02 PM »
கொள்ளு குழம்பு



தேவையானவை:
கொள்ளு - கால் கப், சிறிய புளி - எலுமிச்சை அளவு, தோல் உரித்த சின்ன வெங்கயம் - கால் கப், தட்டிய சின்ன வெங்காயம் - 6, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 கொள்ளை தண்ணீரில் போட்டு, கல் நீக்கி அரித்து எடுத்து, பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 6 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். முழுதான சின்ன வெங்காயத்தை 2 டீஸ்பூன் எண்ணெ யில் வதக்கவும். வறுத்த பொருட்களுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து, தண் ணீர் தெளித்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் வேக வைத்த கொள்ளு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இந்த விழுதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும், சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். தட்டிய சின்ன வெங்காயத்தை எண் ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #26 on: December 20, 2013, 06:26:33 PM »
இனிப்பு அவல்



தேவையானவை:
மெலிதான அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2, தேங்காய் துருவல் - கால் கப்.

செய்முறை: 
அவலில் தண்ணீர் விட்டு கழுவி, உடனே நீரை  வடித்து தனியே எடுத்து வைக்கவும். பொடித்த வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப் பில் வைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி... மீண்டும் அடுப்பிலேற்றி, வெல்லக் கரைசல் ஒரு கொதி வந்தவுடன் எடுத்து அவலில் ஊற்றி... பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பரிமாறவும்.
வெளியூர் பயணங்களில் கழுவிய அவலில், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கியும் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #27 on: December 20, 2013, 06:28:31 PM »
மஞ்சள் பூசணி  மாங்காய் பச்சடி



தேவையானவை:
தோல் சீவி, நறுக்கிய மஞ்சள் பூசணி - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய மாங்காய் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, வெல்லம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண்ணெய், - சிறிதளவு. 

செய்முறை: 
தேங்காய் துருவல், சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். தோல் சீவி நறுக்கிய பூசணி, மாங் காயை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இதில் உப்பு சேர்க்க வும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, வெல்லம் சேர்த்து, நன்றாக கொதி வந்ததும் இறக் கவும். தாளிக்க கொடுத்துள்ள வற்றை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #28 on: December 20, 2013, 06:29:59 PM »
வேர்க்கடலை பக்கோடா



தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது (விருப்பப் பட்டால்) - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தண்ணீர் தெளித்து பிசிறவும். பிறகு, காய்ந்த எண் ணெயில் உதிர்த்துப் போட்டு பொரிக் கவும். பின்னர், சிறிதளவு கறிவேப் பிலையை பொரித்து எடுத்து கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #29 on: December 20, 2013, 06:31:09 PM »
ஹோட்டல் சட்னி



தேவையானவை:
பொட்டுகடலை - ஒரு கப், பூண்டு - 3 பல், இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல்  - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - விருப்பத்துக்கேற்ப, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: 
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சிறிதளவு  தண்ணீர் விட்டு கெட்டியாக, நைஸாக அரைக்வும்.
வெளியூர் பயணத்துக்கு எடுத்து சென்று உபயோகிப்பதென்றால், கொப்பரை துருவல், பொட்டுக்கடலை, உப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து பொடிக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் விட்டு உபயோகிக்கவும்