Author Topic: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~  (Read 2807 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அரிசி வடை



தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 6 கப், துவரம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப்,  நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவை யான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு  2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.... ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது). கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு தக்காளி ரச அடி வண்டல், தயிர் போன்றவற்றை தொட்டுக் கொள்ளலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #1 on: December 20, 2013, 04:49:12 PM »
கார தோசை



தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப்,  எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: 
புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தேவையான நீர் விட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மாவை 2 மணி நேரம் புளிக்க வைக்க வும். பிறகு, மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டு கொள்ள...  கத்திரிக்காய் சட்னி ஏற்றது. கத்திரிக் காயை சுட்டு, தோலுரிக்கவும். மிக்ஸி யில் பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புளி, சாம்பார் வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து... கத்திரிக்காயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #2 on: December 20, 2013, 04:51:06 PM »
தொப்பை சட்னி



தேவையானவை:
சிவப்பு பூசணி (தோல் மற்றும் விதையுடன் கூடிய சதைப் பகுதி), வாழைக்காய் தோல், பிஞ்சு புடலங்காய் உள்ளே உள்ள விதைப் பகுதி, பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப் பகுதி, சேனைக்கிழங்கின் தோல் நீக்கி லேசாக நறுக்கிய  சதைப் பகுதி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 4 (அல்லது தேவைக்கேற்ப), புளி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். காய்களின் தோல், சதைப் பகுதிகளை நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும். கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் காய்களை சேர்த்து சிவக்க வதக்கவும். மிக்ஸியில் உப்பு, புளி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பொருட்கள் சேர்த்து அரைக்கவும். பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிய காய்கள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #3 on: December 20, 2013, 04:59:57 PM »
வெந்தயக் குழம்பு



தேவையானவை:
வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 15 அல்லது 20 பற்கள், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று,  கறிவேப்பிலை - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெல்லம் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் -  2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்க்கவும். வெந்தயம் சிவந்து மணம் வந்தபின் புளியைக் கரைத்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் சேர்க்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #4 on: December 20, 2013, 05:01:38 PM »
சோள வடாம்



தேவையானவை:
தோல் நீக்கிய வெள்ளை சோளம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
சோளத்தைக் கழுவி, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... பின்னர் நீரை வடித்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நீர் விட்டு நைஸசாக அரைக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து, பொடித்த மிளகு சேர்க்கவும். இந்த மாவை 3 மணி நேரம் புளிக்கவிடவும். மாவை கரண்டியில் எடுத்து வடாம் ஸ்டாண்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்க... 2 நிமிடத்தில் வெந்துவிடும். இதனை உரித்து எடுத்து உடனே சாப்பிடலாம். நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் கலக்கி தொட்டு சாப்பிடலாம்.
வடாம் ஸ்டாண்ட் கிடைக்கவில்லை என்றால், வாழை இலை, புரச இலையைப் பயன்படுத்தி ஆவியில் வேக வைக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #5 on: December 20, 2013, 05:03:17 PM »
கொள்ளு ரசம்



தேவையானவை:
கொள்ளு - அரை கப்புக்கும் கொஞ்சம் குறைவாக, தனியா, சீரகம் - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - அரை டீஸ்பூன், நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப், புளிக்கரைசல் - கால் கப், நெய், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கொள்ளைக் கழுவி, 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் (குக்கரில் 6 (அ) 7 விசில் விடலாம்). கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, சாம்பார் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும் ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து... வேக வைத்த கொள்ளு கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் வேக வைத்த கொள்ளு ஒரு டேபிள்டீஸ்பூன் சேர்க்கவும். பிறகு புளிக்கரைசல் விட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கி... கொத்தமல்லி சேர்க்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #6 on: December 20, 2013, 05:05:14 PM »
தக்காளி தோசை



தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், தக்காளி - 4 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, தனியா - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி, ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை (எண்ணெய், வெங்காயம் நீங்கலாக) சேர்த்து கொரகொரவென்று அரைத்து, வெங்காயத்தை சேர்க்கவும். மாவை ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, சூடான தோசைக்கல்லில் மாவை மெலிதான தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, முறுகலானதும் திருப்பிப் போட்டு, நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #7 on: December 20, 2013, 05:07:09 PM »
கலவைக் காய் குழம்பு



தேவையானவை:
மஞ்சள் பூசணி - ஒரு கீற்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சைக்கொட்டை, பீர்க்கங்காய், காராமணி, மாங்காய் (சேர்ந்து) - 2 கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் -  சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
பாத்திரத்தில் காய்கறிகளைப் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு (மிகவும் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இல்லாமல் மீடியமாக கரைக்கவும்) கொதிக்கவிடவும். இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், வெல்லம், உப்பு சேர்க்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் கரண்டியால் 2 முறை மசித்துவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தயிர் சாத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #8 on: December 20, 2013, 05:09:11 PM »
முருங்கைக்காய் கூட்டுச் சாறு



தேவையானவை:
முருங்கைக்காய் - 2, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3,  உரித்த சின்ன வெங்காயம் - அரை கப்.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, தட்டிய சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: 
காய்ந்த மிளகாய், தனியா, துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் சற்று அதிக அளவு எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
முருங்கைக்காயைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தேவையான தண்ணீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். முருங்கைக்காய் வெந்தபின் அரைத்த விழுதைப் போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தட்டிய வெங்காயம் போட்டு வதக்கி சேர்க்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #9 on: December 20, 2013, 05:10:54 PM »
புழுங்கலரிசி இலை வடாம்



தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், மிளகு -  (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
அரிசியைத் தண்ணீரில் கழுவி 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடித்து, தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க வைக்கவும் (அதிக புளிப்பு வேண்டாம் என்பவர்கள் 3 மணி நேரம் புளிக்க வைக்கலாம்). பிறகு, மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கலக்கவும். வடாம் ஸ்டாண்ட் அல்லது புரச இலை அல்லது வாழை இலையில் மாவை லேசாக ஊற்றி, ஆவியில் வேக வைத்து, வெந்ததும்  எடுத்து உரித்து உடனே சாப்பிடலாம். இதை நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்த்தூள், சூடான நெய் சேர்த் துக் கலந்து தொட்டு சாப் பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #10 on: December 20, 2013, 05:59:07 PM »
சின்ன வெங்காய குழம்பு



தேவையானவை:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் (சிறியது) - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் புளியைக் கரைத்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
பச்சை மிளகாய்க்குப் பதில் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தும் தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #11 on: December 20, 2013, 06:00:41 PM »
கச்சாயம்



தேவையானவை:
பச்சரிசி  - ஒரு கப், பாகு வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு கப்.

செய்முறை: 
பச்சரிசியைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி, நைஸாக பொடித்து, சிறிய கண்ணுள்ள ஜல்லடையில் 2, 3 முறை சலிக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும். பாகு உருண்டை பதம் வந்தபின் அதில் மாவை கொட்டிக் கிளறவும். (எப்போதும் மாவு அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). கிளறிய மாவை எடுத்துப் பார்க்கும்போது மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது... லூஸாகவும் இருக்கக் கூடாது. மாவின் மீது நெய் தடவி வைக்கவும் (மாவை உபயோகிக்கும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்). அடுத்த நாள் வாழை இலையில் நெய் தடவி, மாவை உருட்டி வைத்து, லேசாக தட்டவும். கடாயில் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த கச்சாயத்தை போட்டு, உடனே திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #12 on: December 20, 2013, 06:03:42 PM »
பச்சை மிளகாய் குழம்பு



தேவையானவை:
பச்சை மிளகாய் - 10, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: பச்சரிசி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை: 
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி 'கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி... தனியே எடுத்து வைக்கவும்.
புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும். குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #13 on: December 20, 2013, 06:05:05 PM »
கார அச்சு முறுக்கு



தேவையானவை:
பொன்னி பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 5, சலித்த பொட்டுக்கடலை மாவு - கால் கப், சுத்தம் செய்த எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி...  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்துக் கரைக்கவும் (மாவு தண்ணியாக இருக்கக் கூடாது. பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்). கடாயில் முறுக்கு அச்சு முழுகுமளவுக்கு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். அச்சு சூடானதும், வெளியில் எடுத்து மாவில் தோய்த்து பிறகு கைப்பிடியை பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும். அச்சில் உள்ள மாவு கழன்று விழுந்துவிடும். மாவு விழவில்லை என்றால், நீண்ட கம்பியால் தள்ளிவிடலாம். முறுக்கு இருபுறமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
குறிப்பு: மாவை அரைத்தவுடன் முறுக்கு செய்யவும். மாவு புளிக்கக் கூடாது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226495
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை கொங்கு நாட்டு சமையல் ~
« Reply #14 on: December 20, 2013, 06:06:18 PM »
ஆப்பம்



தேவையானவை:
 பச்சரிசி - ஒரு கப், இட்லி  புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம், உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
முதல் நாள் இரவு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மறுநாள் ஆப்பக்கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, ஆப்ப மாவை விட்டு கடாயை சுழற்றவும். பிறகு மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஆப்பம் மொறுமொறுவென்று ஆனதும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.