Author Topic: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~  (Read 1770 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை!



''உடல் நலம் பாதிக்கப்படும்போது, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், எவற்றைச் சாப்பிடக் கூடாதோ... அவற்றைத் தவிர்த்தாலே, பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்திவிட முடியும். கொஞ்சம் மெனக்கெடலும், சமையலறையில் கூடுதல் கரிசனமும் முறையான மருத்துவத்துடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே எந்த நோய்க் கூட்டத்திலிருந்தும் தப்பிக்கலாம்'' என்கிற சித்த மருத்துவர் சிவராமன், நோய் வந்தால் உணவு விஷயத்தில் எவற்றைத் தவிர்க்கலாம்... எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து விளக்குகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


புளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், காராமணி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் குளிர்பானங்கள், செரிமானத்துக்குச் சிரமம் தரும் மாவுப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும்.

வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, சீரகம், புதினா, பூண்டு, முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் வாதத்தைக் குறைக்கலாம். 
« Last Edit: October 18, 2013, 02:39:40 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பித்தம்



உணவில் காரத்தைக் குறைக்கவேண்டும். கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்த அளவு கோதுமை, கைக்குத்தல் அரிசி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, தனியா, சீரகம், எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி ஆகியவை பித்தத்தைக் குறைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கபம்



பால், இனிப்பு, தர்ப்பூசணி, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் இவற்றைத் தவிர்க்கவேண்டும். 
சுரைக்காய், வெண்பூசணி மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் இவற்றை மூன்று முதல் ஐந்து மாதங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கலாம்.
அப்படி முடியாதபட்சத்தில், மிளகு சேர்த்துச் சாப்பிடலாம்.

பழங்களில் கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை வேண்டாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் கபத்தைச் சேர்ப்பதால் தவிர்த்துவிடுவது நல்லது. மோர், மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை கபத்தைக் குறைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிறுநீரக நோய் 



அதிக உப்பு, ஊறுகாய்கள், பொட்டாஷியம் நிறைந்த பழங்களான வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் தவிர்க்க வேண்டும்.  சோடியம் நிறைந்த பழங்களான பைனாப்பிள், பப்பாளி, கொய்யா மற்றும் காய்கறிகளில் பீட்ரூட், நூல்கோல், கேரட், பருப்புக் கீரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர்.  வாரம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை அவசியம் சேர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆஸ்துமா

வாயுவை உண்டாக்கும், செரிக்க நேரமாகும் உணவுகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள், இனிப்பு வகைகள் தவிர்க்கவேண்டும். மருந்து எடுத்துக்கொள்பவர்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. 
சிவப்பு அரிசி அவல், புழுங்கலரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், மிளகு ரசம், தூதுவளை ரசம், முருங்கைக்கீரைப் பொரியல், லவங்கப்பட்டைத் தேநீர், மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தும் எளிய உணவுகளைச் சாப்பிடலாம். பல் துலக்கியதும் 2, 3 கப் வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மலச்சிக்கல்



பிஸ்கட், மைதாவில் செய்யப்பட்ட பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற கடின உணவுகளைத் தவிர்க்கவேண்டும். தினசரி மூன்றரை முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். நார்ச் சத்து அதிகம் உள்ள பிடிகருணை, வாழைத்தண்டுப் பச்சடி, பாசிப்பருப்பு சேர்த்த கீரை, வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத கோதுமை நல்லது. 

இரவு உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம், சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம்.  மாலை நேரத்தில் 10 முதல் 15 காய்ந்த திராட்சை எடுத்துக்கொள்வது நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சர்க்கரை நோய்



சர்க்கரை, பட்டை தீட்டிய அரிசி, கோதுமை, கேரட், பீட்ரூட், பூமியில் விளையும் கிழங்குகள் குறிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்கவேண்டும்.     கொத்தவரங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, வெண்டை, கோவைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா மற்றும் துவர்ப்புள்ள பழங்கள் மிகவும் நல்லது.

புழுங்கல் அரிசி, தினை அரிசி, வரகரிசி, மாப்பிள்ளை சம்பா அவல் என  வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உயர் ரத்த அழுத்தம்



அதிக உப்பு, ஊறுகாய், மிளகாய்ப்பொடி, அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும். 

வெந்தயம், சீரகம் மிகவும் நல்லது. மதிய வேளையில் ஐந்து முதல் பத்து பூண்டு பற்கள், தினசரி 50 கிராமுக்குக் குறையாமல் வெங்காயம் மற்றும் வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அலுப்பு / சோர்வு

அதிகம் புளி சேர்த்த உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும். 
இரவில் நல்ல செரிமானத்தைத் தரக்கூடிய, தூக்கத்துக்குத் தடையில்லாத எளிய உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நெல்லிக்காய், காய்ந்த திராட்சை, உலர் அத்தி தினசரி காலை வேளையில் சாப்பிடும்போது, அன்று முழுவதும் உற்சாகத்தைத் தரும்.  தினசரி 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூட்டுவலி

'புளிர் துவர் விஞ்சின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம்.  அதிகப் புளிப்பு, காரக்குழம்பு, புளியோதரை, ப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் தவிர்க்கவும்.
தினசரி 40 நிமிட நடை, 15 நிமிட ஓய்வு,  30 நிமிடம் மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், 4, 5 யோகாசனங்கள், கால்சியம் நிறைந்த கீரை, ஒரு கப் மோர், ஒரு கப் பழத்துண்டுகள் இவற்றை தினசரி மேற்கொள்ளவேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரத்தசோகை



எள், பனைவெல்லம், பச்சைப்பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, பெரிய நெல்லிக்காய், கீரைகளில் சிறுகீரை, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, பசலைக் கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை... பழங்களில் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி தினமும் சேர்க்கவேண்டும். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காய்ச்சல்



கடின உணவுகள், வறுத்தல், பொரித்த உணவு வகைகள், கிழங்கு வகைகளைத் தவிர்க்கவேண்டும். கண்ணுக்கும் உடலுக்கும் அதிக அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். 

காய்ச்சலுக்கு மருந்து, பட்டினிதான். இன்றைய காலத்தில் உடல்வலுவுக்கு பட்டினி இருப்பதும் நல்லது அல்ல. இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்ற எளிய உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.  சுக்கு, மிளகு, ஓமம் சேர்த்த கஷாயம் நல்லது. குழந்தைகளுக்கு சீரகக் கஷாயம் நல்லது. 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடல் பருமன்



உடல் பருமனைக் குறைக்க, பட்டினி ஒரு தீர்வு அல்ல. சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அளவான சாப்பாடு, குறைந்த கலோரி நிறைந்த நார்ப் பொருட்கள். ஒரு கப் (150 கிராம்) சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து அதாவது, ஒரு பங்கு சாதத்துடன் குழம்பு, ரசம், மோர் என சாப்பிடவேண்டும்.  கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் அடிக்கடி சாப்பிடலாம்.
நம் உடலில் உள்ள ரத்த அமிலத்தன்மையை பழங்களும், தாவர உணவுகளும் சுலபத்தில் மாற்றி சீர்செய்துவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் ஒன்றுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை சாப்பிடலாம். மூன்று வித வண்ணங்களில் உள்ள பழங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எல்லாச் சத்துக்களும் கிடைத்துவிடும்'' என்று கூறும் இயற்கை மருத்துவர் ரத்தின சக்திவேல், பழங்கள், தானியங்கள், சூப் வகைகளின் சத்துக்களைப் பட்டியலிட்டார். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பழங்கள்



வாழைப்பழம்: தினமும் ஒன்று முதல் ஐந்து வரை சாப்பிடலாம். அதிக குளுகோஸ் இருக்கிறது.  மலச்சிக்கலைப் போக்கும். மூலம், வயிற்றுப்புண்களை மட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
மாம்பழம்: ஒரு வேளைக்கு 500 கிராம் வரை சாப்பிடலாம். மாலைக்கண் நோயை விரட்டும். மலச்சிக்கலை சரியாக்கும். தோலுக்கு மிகவும் நல்லது. 
பலாப்பழம்: தேனுடன் சேர்த்து ஒரு வேளை உணவாகச் சாப்பிடலாம். ஆர்வக்கோளாறில் அதிக சுளைகளைச் சாப்பிட்டு வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டாலும் இதன் கொட்டையை வறுத்துச் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
பப்பாளி: செரிமானத்தைத் தரும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது.  தோலில் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலை விரட்டும்.  வயிற்றுப் பூச்சிகளை விரட்டும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அகோரப் பசியைப் போக்கும்.  உடல் வனப்பு கூடும். குரல் வளம் பெருகும்.