Author Topic: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~  (Read 1942 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தானியங்கள்



முளைவிட்ட தானியங்கள் மற்ற உணவுகளைப் போல் உடனடியாகச் செய்து சாப்பிடக்கூடியது அல்ல. எட்டு மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதால் சோம்பலாகக் கருதி தவிர்த்துவிடுகிறோம்.
முளைவிட்ட தானியங்களை சுலபமான முறையில் தயாரிக்கலாம்.  'ஸ்ப்ரவுட்ஸ் மேக்கர்’ இருப்பதிலேயே சுலபமானது. கீழ் அடுக்குகளில் தானியமும் மேல் அடுக்கில் தண்ணீரும் ஊற்றிவைத்தால், தண்ணீர் சொட்டுச் சொட்டாக இறங்கும்.  எட்டு முதல் 12 மணி நேரத்தில் தானிய முளை வரும். நாம் கழுவிச் சாப்பிடலாம். தண்ணீரை அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ ஊற்றினால், சரியாக முளைக்காது.   

பொதுவாக ஊறிய தானியங்களில் சத்துக்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முளைத்து தோல் வெடிக்கும்போது அதில் மிக அதிக அளவு வைட்டமின்களும், தாது உப்புக்களும் சேரும். இதை மாவாக அரைத்தும் அருந்தலாம். முளை தானியமாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.  கடைகளில் விற்கும் பாக்கெட் முளைதானியங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், முளைகட்டிய தானியங்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். 
முளைகட்டிய தானியங்கள் மிகுந்துவிட்டால், அதை உலர வைத்து அரைத்துக் கஞ்சி, அடை அல்லது சப்பாத்தியாகச் செய்து சாப்பிடலாம். 

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எள் முளைப்பால்



எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் முளைக்க வைத்துச் சாப்பிடலாம்.  வெள்ளை எள்ளை நன்றாகக் கழுவி, மண் இல்லாமல் அரித்து தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டித் தொங்கவிட வேண்டும். முளைத்த எள்ளை தண்ணீர்விட்டு அரைத்து, வெல்லம், பேரீட்சை சேர்த்துச் சாப்பிடலாம். 
மருத்துவப் பலன்கள்:  உடல் பருக்க விரும்புபவர்கள், அடிக்கடி ஒரு பிடி முளைகட்டிய எள்ளை சாப்பிடலாம். 

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொள்ளு முளைப்பால்



உடல் மெலிந்தவர்கள் எள்ளை நாடுவதுபோல, உடல் பருமனாக இருப்பவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுப் பாலையும் அருந்தலாம்.
கொள்ளுப் பயறை எட்டு முதல் 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து ஈரத் துணியால் கட்டிவிடுங்கள்.  முளைவிட்டதும், அரைத்து பால் எடுத்து அருந்தலாம். 
மருத்துவப் பலன்கள்: குதிரைக்கு இணையான ஆற்றலைப் பெற, அடிக்கடி கொள்ளு முளைப்பால் சாப்பிட, உடல் பலம் பெறும். கொழுப்பு கரைந்துவிடும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கறுப்பு உளுந்து முளைப்பால்

உளுந்தை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற ஈரத் துணியில் கட்டித் தொங்கவிடுங்கள்.  12 மணி நேரத்தில் முளைவிட்டுவிடும்.  இதை நீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கலாம். 
மருத்துவப் பலன்கள்: உடல் போஷாக்குடன் இருக்கும்.  குளிர்ச்சி மிகுந்த உணவு.  தாய்ப்பால் அதிகரிக்கும். உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாகிவிடுவார்கள். 

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொண்டைக்கடலை முளைப்பால்

கொண்டைக்கடலை ஊறி, முளைவிட 24 மணி நேரம் ஆகும்.  12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி முளைவிட்டதும் அரைத்துப் பால் எடுத்துப் பருகலாம். 
மருத்துவப் பலன்கள்: அதிக புரதச் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகள், கடின உழைப்பாளிகள்,  விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டுவந்தால், ஆற்றல் அதிகரிக்கும்.   பச்சைப்பயறு முளைப்பால்
எட்டு மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாக அலசி, ஈரப் பருத்தித் துணியில் கட்டி எட்டு மணி நேரம் முளைக்கவிடலாம்.  இதனுடன் நீர் கலந்து மிக்ஸியில் அடிக்கவும்.  பச்சைப் பயறு பாலாகக் கிடைத்ததும், இதில் தேன், வெல்லம் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடலாம்.   
மருத்துவப் பலன்கள்: வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மிகவும் நல்லது.  சர்க்கரை நோயாளிகள் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோதுமை முளைப்பால்



பஞ்சாப் கோதுமையைக் குறைந்தது எட்டு முதல் 12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி.  காற்றோட்டமான அறையில் தொங்கவிட வேண்டும். எட்டு மணிக்கு மேல் ஊறவைத்தால் புது நீர் மாற்ற வேண்டும்.  கோதுமை முளைவிட, 12 முதல் 18 மணி நேரம் ஆகும்.  முளைத்த கோதுமையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 150 மி.லி. தண்ணீர் சேர்த்து அரைத்து, தேன், வெல்லம், மிளகுத்தூள் கலந்து பருகலாம். 
மருத்துவப் பலன்கள்:  புற்றுநோய் வீரியத்தைக் குறைக்கும். ஊட்டச்சத்தானது. கொழுப்பைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு நல்லது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு முளைப்பால்

8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, 12 மணி நேரம் ஈரத்துணியில் அல்லது முளை தானியப் பாத்திரத்தில் வைத்தால், முளை கிளம்பி வரும். 
அடிக்கடி ஒரு கைப்பிடி முதல் இரண்டு கைப்பிடி அளவுக்குச் சாப்பிடலாம். நீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் காய்ச்சி அருந்தலாம். 
மருத்துவப் பலன்கள்:  உடலில் தெம்புகூடும்.  சக்தி அதிகரிக்கும். உடல் யானை பலம் பெறும். திடகாத்திரமாக இருக்கும்.
இதேபோல் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், பார்லி, சோயா, வெந்தயம், வேர்க்கடலையை வைத்துத் தயாரிக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூலிகை சூப் வகைகள்



சா£ப்பிடுவதற்கு முன்பு சூப் சாப்பிடும் வழக்கம் இன்று அதிகரித்துள்ளது.  சூப் நல்ல பசியைத் தூண்டும். அதிலும் மூலிகை சூப் குடித்து வந்தால், நோயைக் கிட்ட நெருங்கவிடாது.  பொதுவாக சூப் மூலம் 50 கலோரி சக்தியும், கூடவே முளைதானியப்பால், பவுடர்கள் கலப்பதால் 100 கலோரி சக்தியையும் பெறலாம். காலை, மாலை டீ, காபிக்குப் பதிலாக இந்த வகை சூப் சாப்பிட்டுப் பாருங்கள்... உடலில் தெம்பும் ஆரோக்கியமும் கூடும்!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முடக்கத்தான் சூப்



50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.  இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்க்கலாம். 
மருத்துவப் பலன்கள்: 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும். உடல் வலுப்பெறும். 
வல்லாரை சூப்
50 கிராம் வல்லாரைக் கீரையைப் பொடியாக நறுக்கி, பசுமை மாறாமல் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கூடவே விரும்பிய காய்கறிகளைச் சேர்த்துக் கொதித்ததும், மசித்து வடிகட்டவும்.  இதில் சிறிது கோதுமை மாவு கலந்து தயாரிக்கலாம். 
மருத்துவப் பலன்கள்:  நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, குடல்புண், மாலைக்கண் நோய் சரியாகும். 
பொன்னாங்கண்ணி சூப்
75 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி 250 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  இதனுடன் 50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதித்ததும், மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் கேழ்வரகு மாவைக் கலந்து இறக்கவும்.  விருப்பப்பட்டால் ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்க்கலாம். 
மருத்துவப் பலன்கள்: உடலில் தேமல், சொறி சரியாகும். ரத்தசோகை விலகி, முகம் பொலிவு பெறும்.  குடல்புண், பித்தம் அகலும்.  பொன்னிறம் கூடும்.  கண்ணுக்கு மிகவும் நல்லது.   

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
துளசி சூப்



ஒரு கைப்பிடி துளசி அல்லது 10 கிராம் துளசிப் பொடியை நீர் சேர்த்து,  50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து மசிக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.
மருத்துவப் பலன்கள்:  கபத்தைப் போக்கும். கல்லீரல் வீக்கம், பல் வலி குறையும்.  மூச்சுப்பிடிப்பு, விஷக்காய்ச்சல், ஆஸ்துமா சரியாக்கும். 

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தமல்லி சூப்

ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன் பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.  இதனுடன் பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்தூள், சீரகத்தூள் முளை தானியப்பால் சேர்த்து அருந்துங்கள். 
மருத்துவப் பலன்கள்: வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், அஜீரணம், பித்தம் இவற்றைச் சரிசெய்யும்.  சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227410
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முருங்கைக்கீரை சூப்



75 கிராம் காய்கறிக் கலவையை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். ஒரு கட்டு முருங்கை இலையை உதிர்த்து, கழுவி நீர்விட்டு வேகவிடவும். இதில் மசித்த காய்கறிக் கலவையைப் போட்டு மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது முளைதானியப்பாலைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

மருத்துவப் பலன்கள்: உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நல்ல குணம் தெரியும். நரம்புத் தளர்ச்சி, பெண்களுக்கு அதிக உதிரப்போக்கும் சரியாகும். எலும்பு வலுவடையும்.