காலிஃப்ளவர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மாங்காய் துருவல் - கால் கப், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்-கவும். அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப் பொரித்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து.. பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தனியாத்தூள் சேர்த்து மாங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.