Author Topic: 30 வகை வெஜிடபிள் பிரியாணி  (Read 2184 times)

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #15 on: October 08, 2013, 10:33:51 AM »
சிவப்பு மிளகாய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பழுத்து சிவந்த பச்சை மிளகாய் - 4, தக்காளி - 1, புளி - 50 கிராம், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், செலரி இலைத் துண்டுகள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலாக்காய் - தலா ஒரு துண்டு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பழுத்த மிளகாய் (சுத்தம் செய்தது), தக்காளி, புளியை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, வடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... ஏலக்காய், கிராம்பு, பட்டை தாளித்து... வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிதமாக வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி அரிசி, உப்பு போட்டுக் கிளறவும். தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து செலரித் துண்டுகளைப் போட்டுக் கலந்தால்... வித்தியாசமான சிவப்பு மிளகாய் பிரியாணி சுவையாக ரெடி!

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #16 on: October 08, 2013, 10:34:06 AM »
தயிர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, தயிர் - தலா ஒரு கப், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடமிளகாய், பட்டாணி கலவை - ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், ஜாதிபத்திரி - ஒரு துண்டு, கறுப்பு ஏலக்காய் - சின்ன துண்டு, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 1, புதினா - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: காய்கறி களைத் தோல் சீவி நறுக்கி, சுத்தமாகக் கழுவி, தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, ஜாதிபத்திரி, கறுப்பு ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். தயிர், அதில் ஊறிக் கொண்டிருக்கும் காய்கறி ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு, நெய்யில் வறுத்த அரிசி சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்த்துள்ளதால், சரியான அளவு தண்ணீர் விட்டு, புதினா தூவி, குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #17 on: October 08, 2013, 10:34:21 AM »
பலாமூசு பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சிறிய பலாக்காய்த் துண்டுகள் - அரை கப், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா கால் கப், புதினா, கொத்த மல்லி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நெய், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: பலாமூசு என்னும் சிறிய பலாக்காயைத் தோல் சீவிப் பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். தண்ணீரை வடித்து, ஆறியதும் மிக்ஸியில் ஒருமுறை சுற்றியெடுத்தால் பலா துருவலாகக் கிடைக்கும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளியைப் போடவும். லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, காய்ந்த மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் பலாத்துருவல், உப்பு சேர்த்துக் கலந்து, அரிசியைப் போட்டு தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும், சில நிமிடங்கள் விட்டு இறக்கவும். பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #18 on: October 08, 2013, 10:34:35 AM »
சோயாபனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், துருவிய சோயாபனீர் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை கப், நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் இரண்டும் சேர்ந்து - கால் கப், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், ஒன்றிரண்டாகப் பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் - ஒன்றரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, ஈரம் போக நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பொடித்த மசாலா சேர்த்து தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போனதும்... நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, துருவிய சோயாபனீர் சேர்த்துக் கலக்கவும். தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து அரிசியைப் போட்டுக் கிளறி மூடவும். மிதமான தீயில் வேகவிட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #19 on: October 08, 2013, 10:34:52 AM »
வத்தல் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், மணத்தக்காளி வத்தல் - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வத்தல் - 8, மோர் மிளகாய் - 5, சுக்கங்காய் வத்தல் - 8, பாகற்காய் வத்தல் - 5, அரிசி வத்தல் - கைப்-பிடியளவு, வெங்காய வத்தல், ஜவ்வரிசி வத்தல் - சிறிதளவு, கறிவேப்-பிலை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... ஒவ்வொரு வத்தலையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். குக்கரில் நெய் விட்டு, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். வத்தலிலேயே உப்பு இருப்பதால் அளவாக உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, வத்தல்களை போட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், திறந்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தூவி கலக்கிப் பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #20 on: October 08, 2013, 10:35:07 AM »
கீரை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை- ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், உருளைக்கிழங்கு - 2, பச்சை மிளகாய் - 3, பிரிஞ்சி இலை - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பிரிஞ்சி இலை தாளித்து... இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்-கவும். அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #21 on: October 08, 2013, 10:35:28 AM »
வெஜ் பிரியாணி மிமி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி கலவை - தலா ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பிரெட் துண்டுகள் - 2, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மசாலாவுக்கு: பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - ஒன்று, ரோஜா மொட்டு - ஒரு துண்டு, கசகசா - ஒரு டீஸ்பூன். முந்திரி - 3, பாதாம் - 3, வதக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - 5, சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய்ப் பால் - கால் கப்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரோஜா மொட்டு, கசகசாவை வறுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், இஞ்சி, பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், மிளகு, சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய்ப் பால் விட்டு நைஸாக அரைக்கவும்.
பிரெட் துண்டுகளை, எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும், தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கி, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து... அரிசி, அரைத்த மசாலாவையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடவும். மீண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்கி, பிரெட் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #22 on: October 08, 2013, 10:35:43 AM »
தேங்காய்ப் பால் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், சின்ன உருளைக்கிழங்கு (வேக வைத்து தோலுரித்தது) - 1 கப், பச்சை மிளகாய் - 3, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு, 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #23 on: October 08, 2013, 10:35:58 AM »
கலர்ஃபுல் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 1 கப், பப்பாளிக்காய், சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய், பீன்ஸ், கேரட், தக்காளி கலவை - ஒரு கப், வயலட் முட்டைகோஸ் - கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1, பச்சை மிளகாய் - 10, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பச்சை மிளகாயை கிள்ளிப் போடவும். அது சுருண்டு, அதன் காரம் எண்ணெயில் இறங்கியதும்... மிளகாய்களை எடுத்து விடவும். பிறகு, அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து... இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். பச்சை வாசனை போனவுடன், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைப் போட்டு வதக்கவும். காய்கறிகளின் நிறம் மாறாமல் வதக்கி, அரிசி, உப்பு, தண்ணீர் விட்டு மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி போனதும் மூடியைத் திறந்து கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #24 on: October 08, 2013, 10:36:18 AM »
ஃப்ரெஷ் புரோட்டீன் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், ஃப்ரெஷ் பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், மொச்சைக் கொட்டை, பட்டாணி (கலந்தது) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கிராம்பு, ஏலக்காய் - தலா 1, பட்டை - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். அதனுடன், சீரகம், தனியா, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். ஃப்ரெஷ் பீன்ஸ்களைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கவும். வதங்கியதும், அரிசியைப் போட்டு ஒருமுறை கிளறி... உப்பு, தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #25 on: October 08, 2013, 10:36:34 AM »
கேரட் ஜூஸ் பிரியாணி
தேவையானவை: திக்கான கேரட் ஜூஸ், பாசுமதி அரிசி - தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு.... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், பட்டாணி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி... அரிசி, உப்பு, கேரட் ஜூஸ் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும். ஆவி போனதும், திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் சீஸ் துருவல் சேர்த்தும் பரிமாறலாம்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #26 on: October 08, 2013, 10:36:50 AM »
கத்திரிக்காய் பிரியாணி
தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ, பாசுமதி அரிசி - ஒரு கப், சின்ன வெங்காயம் - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கிராம்பு - 2, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - அரை டீஸ்பூன், புளி - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளி நீங்கலாக, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், புளியை சிறு துண்டுகளாகப் போட்டெடுத்து, வறுத்தவற்றைச் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். கத்திரிக்காயை நடுவில் மட்டும் நான்காகப் பிளந்ததுபோல் நறுக்கவும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பொடித்த மசாலாவை சேர்த்து வதக்கவும். அரிசி சேர்த்துக் கிளறி, தண்ணீர் விட்டு, வறுத்த கத்தரிக்காயைச் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி போனதும் திறந்து, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #27 on: October 08, 2013, 10:37:05 AM »
மஷ்ரூம் (காளான்) பிரியாணி
தேவையானவை: மஷ்ரூம் - அரை கப், பாசுமதி அரிசி - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, நறுக்கிய வெங்காயம் - கால் கப், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது), நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு முறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, அரிசியை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், மஷ்ரூம் போட்டு வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரிசி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #28 on: October 08, 2013, 10:37:24 AM »
நாட்டுக் காய்கறி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வாழைத்தண்டு, கொத்தவரங்காய், அவரைக்காய், வாழைக்காய், பரங்கிக்காய், கீரைத்தண்டு கலவை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கசகசா - ஒரு டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 1, எள், தனியா, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு... அரிசியை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் எள்ளை வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... கசகசா, கிராம்பு, ஏலக்காய், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கொப்பரைத் துருவல், எள் சேர்த்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்கறிகளை வதக்கி, பொடித்த மசாலா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வாசனை வந்ததும்... அரிசி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி, மிதமான தீயில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும், சில நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

Offline kanmani

Re: 30 வகை வெஜிடபிள் பிரியாணி
« Reply #29 on: October 08, 2013, 10:37:42 AM »
ஸ்டஃப்டு மிளகாய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பஜ்ஜி மிளகாய் - 3, கொப்பரைத் துருவல் - கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பஜ்ஜி மிளகாயைக் கீறி விதைகளை நீக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கொப்பரைத் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசலாத்தூள், தனியாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்கள் ஒவ்வொன்றிலும் அடைத்து 'ஸ்டஃப்' செய்யவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை லேசாக வதக்கவும். ஒவ்வொரு மிளகாயையும் 3 துண்டுகளாக்கவும். குக்கரில் நெய் விட்டு, ஊற வைத்து தண்ணீர் வடித்த அரிசியை வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். துண்டுகளாக்கிய மிளகாயைச் சேர்த்து லேசாகக் கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.