எங்கள் வீட்டு விருந்தோம்பல்
என்றென்றும் திருவிழாவாய்
எங்கள் வீடு நிறைந்திருக்கும்
உறவினர்கள் வருகையின்றி
ஒரு நாளும் இருந்ததில்லை
உற்றார்கள் துணையோடு
சந்தோசத்தில் திளைத்திருந்தோம்
சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம்
இத்தனையும் ஒரு நொடியில்
காணாமல் போனதிங்கு
அப்பாவின் தொழில் நஷ்டம்
அனைத்தையும் இழந்து நின்றோம்
ஒருவரையும் காணவில்லை
ஒருவார்த்தை பேசவில்லை
இத்தனை நாள் வந்த சொந்தம்
ஒருவருமே வருவதில்லை
மனித மனம் மிருகமென்று
அப்பொழுதே அறிந்து கொண்டேன்
சொந்தங்கள் அத்தனையும்
பகட்டானா வாழ்க்கைக்கு தான்
சொத்துக்கள் நிறைய இருந்தால்
சொந்தங்கள் தேடி வரும்
இல்லாமல் போனாலோ
மாயாமாய் ஓடிவிடும்
ஆடம்பரம் வந்த பின்னே
ஒவ்வொருவராய் வந்தார்கள்
பொய்யான உறவுகளை
வரவேற்க விருப்பமில்லை
அன்று வெருத்த என் மனது
இன்று வரை மாறவில்லை
உறவுகளைத் தேடவில்லை
என் உறவுகள் அத்தனையும்
உடன் இருக்கும் நட்புக்களே
அதை விட சிறந்த உறவு
உலகிலேயே எங்குமில்லை
ஆம் என் உடன் இருபவர்களோடு இன்று வரை தொடந்திருக்கிறேன் வாழ்வு பயணத்தை நட்புறவாக…………………………