Author Topic: உறவுகள்  (Read 731 times)

Arul

  • Guest
உறவுகள்
« on: October 01, 2013, 01:00:47 PM »
எங்கள் வீட்டு விருந்தோம்பல்
என்றென்றும் திருவிழாவாய்
எங்கள் வீடு நிறைந்திருக்கும்
உறவினர்கள் வருகையின்றி
ஒரு நாளும் இருந்ததில்லை
உற்றார்கள் துணையோடு
சந்தோசத்தில் திளைத்திருந்தோம்
சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம்
இத்தனையும் ஒரு நொடியில்
காணாமல் போனதிங்கு
அப்பாவின் தொழில் நஷ்டம்
அனைத்தையும் இழந்து நின்றோம்
ஒருவரையும் காணவில்லை
ஒருவார்த்தை பேசவில்லை
இத்தனை நாள் வந்த சொந்தம்
ஒருவருமே வருவதில்லை
மனித மனம் மிருகமென்று
அப்பொழுதே அறிந்து கொண்டேன்
சொந்தங்கள் அத்தனையும்
பகட்டானா வாழ்க்கைக்கு தான்
சொத்துக்கள் நிறைய இருந்தால்
சொந்தங்கள் தேடி வரும்
இல்லாமல் போனாலோ
மாயாமாய் ஓடிவிடும்
ஆடம்பரம் வந்த பின்னே
ஒவ்வொருவராய் வந்தார்கள்
பொய்யான உறவுகளை
வரவேற்க  விருப்பமில்லை
அன்று வெருத்த என் மனது
இன்று வரை மாறவில்லை
உறவுகளைத் தேடவில்லை
என் உறவுகள் அத்தனையும்
உடன் இருக்கும் நட்புக்களே
அதை விட சிறந்த உறவு
உலகிலேயே எங்குமில்லை

ஆம் என் உடன் இருபவர்களோடு இன்று வரை தொடந்திருக்கிறேன் வாழ்வு பயணத்தை நட்புறவாக…………………………

Offline micro diary

Re: உறவுகள்
« Reply #1 on: October 01, 2013, 01:47:27 PM »
azha ezhuthi iruka arul life la sontham epdi irupanganu really nice

உடன் இருக்கும் நட்புக்களே
அதை விட சிறந்த உறவு
உலகிலேயே எங்குமில்லை
 nijam natpu epavum nama kuda irukum

Arul

  • Guest
Re: உறவுகள்
« Reply #2 on: October 01, 2013, 02:40:37 PM »
Thanks Micro...........

Offline Gayathri

Re: உறவுகள்
« Reply #3 on: October 01, 2013, 03:01:48 PM »
நீ  சொல்றது சரி தான் நட்புக்கும் எப்பவுமே  பிரிவு இல்லைமா

Arul

  • Guest
Re: உறவுகள்
« Reply #4 on: October 01, 2013, 05:45:54 PM »
மிக்க நன்றி காயத்ரி...........

Offline Yousuf

Re: உறவுகள்
« Reply #5 on: October 02, 2013, 03:38:50 PM »
நிதர்சனமான உண்மை அருள். நாம் நல்ல நிலையில் இருக்கும்போது சொந்தங்கள் நம்மை தேடி வருவதும் இல்லை என்றால் நம்மை ஏறெடுத்தும் பார்பத்தில்லை. நானும் என்னுடைய வாழ்வில் இப்படி பட்ட சந்தர்ப்பவாத உறவுகளை பார்த்திருக்கிறேன்.

இப்படி பட்டவர்களை விட துன்பத்திலும் இன்பத்திலும் நமக்காக தோழ் கொடுக்கும் தோழன் தான் மிக சிறந்தவன்.

உறவுகளை விட நட்பே உயரந்தது!

நல்ல கவிதை வாழ்த்துக்கள்!

Arul

  • Guest
Re: உறவுகள்
« Reply #6 on: October 02, 2013, 03:48:12 PM »
மிக்க நன்றி YousuF



இங்கு எதுவுமே உண்மை மனதுடன் உறவுகள் இருப்பதில்லை எல்லாமே ஒரு மாய புன்னகையில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள் இது தான் நிதர்சன உண்மை ....................