Author Topic: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்  (Read 5218 times)

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #15 on: September 06, 2013, 05:09:49 AM »
மில்க் டாஃபி

தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் (கடைகளில் கிடைக்கும்) - 1 டின், சர்க்கரை - 1 கப், வெண்ணெய் - 50 கிராம், (விருப்பப்பட்டால்) லிக்விட் க்ளூகோஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1 கப், பாதாம் + முந்திரி + அக்ரூட் - 50 கிராம்.

செய்முறை: கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர், சர்க்கரை சேர்த்து (விருப்பப்பட்டவர்கள் லிக்விட் க்ளூகோஸையும் கலந்து) அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இது நன்குசேர்ந்து வரும்பொழுது, சிறிதளவு எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும். இந்தப் பதத்தில் வெண்ணையையும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி, சிறிது ஆறவிடுங்கள். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், சுவை மிகு ‘மில்க் டாஃபி’ ரெடி (சூடான கலவையை ஒரு ட்ரேயில் பரப்பி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்).

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #16 on: September 06, 2013, 05:10:18 AM »
பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப், பால் - 1 லிட்டர், தேங்காய்ப்பால் - 1 கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை: அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து (வடைமாவு பதத்தில்), கடைசியில் உப்பைச் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள். பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கால் பாகம் வற்றிய பிறகு, சர்க்கரை சேர்த்து, மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். அதில், ஏலக்காய்த் தூள், தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துவையுங்கள். கடாயில் எண்ணெய் காயவைத்து, அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, சுண்டைக்காயளவு கிள்ளி, எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் (சிவந்துவிடாமல்) எடுங்கள். எல்லா மாவையும் இதேபோல் பொரித்து வைத்துக்கொள்ளுங்கள். பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பாக இந்தப் பணியாரங்களை, ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பாலில் கலந்து பரிமாறுங்கள். இது செட்டிநாட்டு ஸ்பெஷல் ஸ்வீட். குறிப்பு: மாவில் சிறிதளவேனும் அரிசியோ, உளுந்தோ அரைபடாமல் இருந்தால் பணியாரம் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு. எனவே, அரைக்கும்போதே மாவை அடிக்கடி தள்ளிவிட்டு, நன்கு அரையுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #17 on: September 06, 2013, 05:10:44 AM »
குலாப்ஜாமூன்

தேவையானவை: பால் - 1 லிட்டர், மைதா - அரை கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஆப்பசோடா - 1 சிட்டிகை, சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, பொரிப்பதற்கு - தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, சுண்டி வரும்போது கிடைக்கும் கோவாவை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அடுத்து, மைதா மாவுடன் ஆப்ப சோடா சேர்த்து இரு முறை சலித்து, நெய் சேர்த்துப் பிசறிக்கொள்ளுங்கள். பின்னர், சலித்த மைதா கலவையுடன் கோவாவைச் சேர்ந்து (தேவையானால் சிறிது பால் தெளித்து) நன்கு பிசையுங்கள். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெயுடன் மீதமுள்ள நெய்யையும் கலந்து, மிதமான தீயில் காயவிடுங்கள். காயும் எண்ணெயில் கோவா உருண்டைகளை போட்டு, நிதானமாக வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுத்துவிடுங்கள். ஜாமூன் உருண்டைகள் ரெடி. மற்றொரு அடுப்பில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும், சிறிதளவு பாலைச் சேருங்கள். பால் சேர்ந்ததும், பாகில் திரண்டு வரும் அழுக்கை எடுத்துவிடுங்கள். ஐந்து நிமிடத்துக்கு பாகு கொதித்ததும் இறக்கிவிடுங்கள் (அதாவது அரைக் கம்பி பதத்தில்). அதில் ஏலக்காய்த்தூள், பொரித்து வைத்துள்ள ஜாமூன் சேர்த்து, நன்கு ஊறியதும் பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #18 on: September 06, 2013, 05:11:08 AM »
மில்க் ஐஸ்கிரீம்

தேவையானவை: பால் - 1 லிட்டர் + அரை கப், சர்க்கரை - அரை கப், வெண்ணெய் - 50 கிராம், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு லிட்டர் பாலை பாதியளவு வருமாறு வற்றக் காய்ச்சுங்கள். அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பின்னர், அரை கப் பாலில் கார்ன்ஃபிளாரைக் கரைத்து, கொதிக்கும் பாலுடன் சேருங்கள். அத்துடன் வெண்ணெயையும் சேருங்கள். 2 நிமிடம் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, வெனிலா எசன்ஸை சேருங்கள். நன்கு ஆறவிடுங்கள். ஒரு மரக்கரண்டியாலோ அல்லது முட்டை அடிக்கும் கருவியாலோ இந்தக் கலவையை நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீஸரில் வைத்து, பாதியளவு செட் ஆனவுடன் வெளியில் எடுத்து திரும்பவும் ஒருமுறை அடியுங்கள். மறுபடியும் ஃப்ரீஸரில் வைத்து குளிரவிட்டு, கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #19 on: September 06, 2013, 05:11:34 AM »
பனீர் கோகனட் பால்ஸ்

 தேவையானவை: பால் - 1 லிட்டர், வினிகர் - 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - கால் கப், ஃபுட் கலர் (ரோஸ்) - 1 சிட்டிகை, ரோஸ் எஸன்ஸ் - சில துளிகள், தேங்காய் - ஒரு பெரிய மூடி, சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்டினால், பனீர் கிடைக்கும். பனீருடன் பொடித்த சர்க்கரை, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள. சர்க்கரை உருகி, இளகி திரும்ப சற்று சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கிவிட வேண்டும். அதில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, அதனுள் பனீர் உருண்டை களை வைத்து, நன்கு மூடி உருட்டுங்கள். ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்து, பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #20 on: September 06, 2013, 05:12:08 AM »
ரஸமலாய்

தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 2 கப், தண்ணீர் - இரண்டரை கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை, சீவிய பிஸ்தா + பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன், வினிகர் - 2 டீஸ்பூன், மைதா - 1 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். அதனுடன் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து, பால் பாதியளவு ஆகும்வரை கொதிக்க விடுங்கள். பிறகு, அதனை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து வையுங்கள். மீதமுள்ள ஒரு லிட்டர் பாலிலிருந்து பனீர் செய்து (செய்முறைக்கு பார்க்க... 93-ம் பக்கம்) கொள்ளுங்கள். அதை ஒரு தட்டில் கொட்டிக்கொண்டு, மைதா சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். குக்கரில் இரண்டரை கப் தண்ணீரையும் மீதமுள்ள சர்க்கரையையும் சேருங்கள். குக்கரை அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போடுங்கள். பின்னர் குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்குங்கள். குக்கர் வெயிட்டை லேசாகத் தூக்கி, பிரஷரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுங்கள். பின்னர், வெந்திருக்கும் உருண்டை களை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்திப் பிழிந்து, காய்ச்சி வைத்துள்ள பாலில் போடுங்கள். நன்கு ஊறியவுடன் பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #21 on: September 06, 2013, 05:12:34 AM »
ஃப்ரூட் கஸ்டர்டு

தேவையானவை: பால் - 1 லிட்டர், வெனிலா கஸ்டர்டு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 கப், பழக்கலவை - 2 கப் (ஆப்பிள், பேரிக்காய், சப்போட்டா, வாழைப்பழம், ஆரஞ்சு எல்லாம் சேர்த்து பொடியாக நறுக்கியது).

செய்முறை: பழக்கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள். காயும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து, கொதிக்க விடுங்கள். தனியாக எடுத்து வைத்திருக்கும் அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவையைச் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #22 on: September 06, 2013, 05:12:56 AM »
பால்கோவா

தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 1 கப், சீவிய பிஸ்தா - 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பாலை அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். பால் நன்கு வற்றி, சேர்ந்தாற்போல் வரும்போது, சர்க்கரையைச் சேர்த்து, நன்கு கிளறுங்கள். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறுங்கள். கோவா திரண்டு வரும் சமயம், சீவிய பிஸ்தா, ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #23 on: September 06, 2013, 05:13:28 AM »
ஃபிர்ணி

தேவையானவை: பால் - 1 லிட்டர், பாஸ்மதி அரிசி - அரை கப், சர்க்கரை - 1 கப், இனிப்பில்லாத கோவா (குலாப்ஜாமூனுக்கு சொன்ன முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்; கடையிலும் வாங்கலாம்) - கால் கப், தோல் நீக்கி, சீவிய பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், சீவிய பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை.

செய்முறை: பாலைக் காய்ச்சுங்கள். பாஸ்மதி அரிசியை ரவை போல் உடைத்து, காயும் பாலில் சேருங்கள். அத்துடன் ஒரு கப் தண்ணீரையும் சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேருங்கள். இரண்டும் சேர்ந்து நன்கு கொதிக்கும்போது, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, கலந்து இறக்குங்கள். குளிரவைத்துப் பரிமாறுங்கள். புத்தம்புதிய பன்னீர் ரோஜா இதழ்களை மேலே தூவியும் பரிமாறலாம். கண்ணுக்கும் சேர்த்து விருந்து படைக்கும் இது.

Offline kanmani

Re: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்
« Reply #24 on: September 06, 2013, 05:13:55 AM »
குல்ஃபி

தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 200 கிராம், முந்திரி - 20, பாதாம் - 20, ஸ்வீட் பிரெட் - 4 துண்டங்கள், ஜெலட்டின் (சர்க்கரை போல இருக்கும் - கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிடுங்கள். பாலை அடுப்பில் வைத்து, பாதியாகும்வரை நன்கு காய்ச்சுங்கள். பின்னர் சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கொதிக்கும்போது, பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பாதாமை, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, தோலை உரித்தெடுங்கள். முந்திரி, பாதாமை சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு அரையுங்கள். அரைத்த விழுதைக் காய்ந்த பாலில் சேருங்கள். கால் கப் தண்ணீரில் ஜெலட்டினைக் கரைத்து, பால் கலவையில் சேருங்கள். ஏலக்காய்த் தூளையும் கலந்து கொள்ளுங்கள். ஆறியதும், குல்ஃபி மோல்டுகள் அல்லது கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து, நன்கு குளிர்ந்ததும் பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: மில்க் ஸ்வீட்ஸ் வகைகள்
« Reply #25 on: September 06, 2013, 09:55:10 AM »
இஞ்சிப் பால்

தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறிய  துண்டு
பால் - 1 கப்
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை...

• இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும்.

•  நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.

• தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும்.

*  ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும்.

• அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.

• இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இந்த இஞ்சி பாலை குடித்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

Offline kanmani

Re: மில்க் ஸ்வீட்ஸ் வகைகள்
« Reply #26 on: September 06, 2013, 09:56:53 AM »
கேரள பா‌ல் பாயச‌ம்


தேவையான பொருட்கள்

தேவையானவை
அ‌ரி‌சி - 1 க‌‌ப்
பா‌ல் - 4 க‌ப்
ச‌ர்‌க்கரை - 2 க‌ப்
மு‌ந்‌தி‌ரி - 12
ஏல‌க்கா‌ய் பொடி - 1 தே‌க்கர‌ண்டி
நெ‌ய் - 2 மேஜை‌‌க் கர‌ண்டி

செய்முறை

செ‌ய்முறை

ஒரு வா‌ண‌லி‌யி‌ல் நெ‌ய் ‌வி‌ட்டு, அ‌‌தி‌ல் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌பி‌ன்ன‌் அ‌ந்த அ‌ரி‌சியை ந‌ன்கு கழு‌வி, ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு, ஒரு க‌ப் அ‌ரி‌சி‌க்கு, ஒரு க‌ப் பா‌ல், ஒரு க‌ப் த‌ண்‌ணீ‌ர் எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.

கா‌ல், த‌ண்‌ணீ‌ர் கலவை‌யி‌ல் அ‌ரி‌சி ந‌ன்கு வெ‌ந்து குழைய வே‌ண்டு‌ம். அ‌ரி‌சி குழ‌ை‌ந்தது‌ம் ‌மீத‌மிரு‌க்கு‌ம் பாலை ஊ‌ற்‌றி அடி‌பிடி‌க்காம‌ல் ‌கிளற வே‌ண்டு‌ம்.

பா‌ல் சு‌ண்டி வரு‌ம்போது ‌தீயை ‌‌மிதமாக வை‌த்து‌வி‌ட்டு ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்கவு‌ம். ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்து பாயாச‌ம் பத‌ம் வரு‌ம்போது ஏல‌‌க்கா‌ய் பொடி, நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம்.

Offline kanmani

Re: மில்க் ஸ்வீட்ஸ் வகைகள்
« Reply #27 on: September 06, 2013, 09:58:10 AM »
பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-250 கிராம்; வெல்லம்-250 கிராம்; பால் 250 கிராம்; துருவிய தேங்காய்-1கப்; ஏலக்காய்-5; முந்திரிப் பருப்பு-10.

செய்முறை:

பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் வெகு நைஸாக அரைத்து எடுக்கவும். மாவு பட்டுப் போல் நைஸாக இருக்கவேண்டும். மாவை சின்னச் சின்ன பால்களாக உருட்டவும்.  உருண்டையாகவோ  அல்லது ஒவல் வடிவத்திலோ இருக்கலாம்.  உருண்டைகள்  கொண்டக்கடலை அளவில் இருக்கவேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிநீரில், அரிசி மாவு  உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்க்கவும்.  உருண்டைகள் வெந்ததும்,   தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் வற்ற விடவும். பிறகு அந்தக் கலவையில்  வெல்லக் கட்டிகளை தட்ட்ப்போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்து சீரானதும் அதில்  பால் சேர்த்து  5 நிமிடம் கொதிக்கவிட்டபின், அந்தக் கரைசலில் தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் சேர்க்கவும். இந்த இனிப்பு பண்டம் தளதளவென்று இருக்கும் . இறக்கியபின் அதில் ஏலக்காய் சேர்த்தால், மணமான சுவையான இனிப்புப் பண்டம் தயார்

Offline kanmani

Re: மில்க் ஸ்வீட்ஸ் வகைகள்
« Reply #28 on: September 06, 2013, 10:03:55 AM »
முந்திரி-தேங்காய் பால்கோவா

தேவையானவை:

கருப்பரிசி _ ஒரு கப்
பச்சைப் பருப்பு _ 1/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் _ ஒரு கப்
பால்_1/4 கப்
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
நெய்_2 டேபிள்ஸ்பூன்
முந்திரி _ 10
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.

நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.

பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

Offline kanmani

Re: மில்க் ஸ்வீட்ஸ் வகைகள்
« Reply #29 on: September 06, 2013, 10:10:51 AM »
பேரிச்சம் பழ கோவா

தேவையான பொருள்கள்:-

பேரிச்சம் பழம் – 1கப்

பால்கோவா – 1கப்

பால் பவுடர் – 1/2கப்

பால் – சிறிதளவு

முந்திரி – 10 நம்பர்

ஏலக்காய் – சிறிதளவு

நெய் – தேவையான அளவு

உப்பு – சிறிதளவு

சர்க்கரை பவுடர் – 2கப்

செய்முறை:-

பேரிச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் வாணலியில் சிறிது நெய் ஊற்றி கோவாவை வதக்கவும். பின்பு அதனுடன் நறுக்கிய பேரிச்சம் பழத்தை சேர்த்து கிளறவும்.

பின்பு அதனுடன் பால்பவுடரை சிறிது பாலில் கலக்கி அதில் விட்டு கிளறவும்.

இக்கலவையுடன் முந்திரி, ஏலக்காய், சர்க்கரை பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுண்டி வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.

நன்கு சுண்டி வந்தவுடன் வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும்.

சிறிது நேரம் ஆறியவுடன் வில்லைகளாக போடவும். ஒவ்வொரு வில்லையின் நடுவில் முந்திரியை வைத்து அலகரிக்கவும்.

நன்கு ஆறியவுடன் வில்லைகளை எடுத்து காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.

தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.

சுவையான பேரிச்சம் பழ கோவா தயார்