காதல் அரங்கேற்றம்

நீண்ட தொரு வழிப்பாதை
இருந்தும் வழி மறந்த விழிகளுடன்
குழந்தை என தவழ்கிறது உள்ளம்
உன் காலடி தடம் தேடியே!
குபுகேன்று பீரிட்டு வெளிவரும்
கண்ணீர் துளிகளெல்லாம் இன்னும்
மொழி பெயர்க்க பட மௌனத்தின்
காதல் முகவரி மெல்ல கசிந்து
எனது உள்ளம் நிரப்பி செல்கிறது.
எழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலை உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கின்றது உனக்கான பிரியங்கள்
என் இதயமெங்கும்.
எனக்கான கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மௌனத்தில் இடருகிறாய்.
தனக்குதானே பேசிக்கொள்வதில் தான்
எதனை ஆனந்தம்
முதல் முறை இதையும்
உனக்கான நினைவேட்டில் நிரப்பிக்கொள்கிறேன்.
நீயும் நானும்
உரையாடி கரைந்த தருணங்களில்
தடை பட்டு தொலைந்து போன
வார்த்தைகளின் மிச்சங்கள் எல்லாம் புதிதாய்
சில சொற்தொடர்
உயிர்பெற்று மீண்டும்
சுவாசிக்க தொடங்கிவிட்டது
நன் இருவருக்கும் இடையேயான காதலென.....
உங்கள் அன்புடன் தர்ஷன்.