Author Topic: காதல் அரங்கேற்றம்  (Read 692 times)

Offline DharShaN

காதல் அரங்கேற்றம்
« on: August 23, 2013, 09:37:06 PM »
காதல் அரங்கேற்றம் :)

நீண்ட தொரு வழிப்பாதை
இருந்தும் வழி மறந்த விழிகளுடன்
குழந்தை என தவழ்கிறது உள்ளம்
உன் காலடி தடம் தேடியே!

குபுகேன்று பீரிட்டு வெளிவரும்
கண்ணீர் துளிகளெல்லாம் இன்னும்
மொழி பெயர்க்க பட மௌனத்தின்
காதல் முகவரி மெல்ல கசிந்து
எனது உள்ளம் நிரப்பி செல்கிறது.

எழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலை உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கின்றது உனக்கான பிரியங்கள்
என் இதயமெங்கும்.

எனக்கான கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மௌனத்தில் இடருகிறாய்.

தனக்குதானே பேசிக்கொள்வதில் தான்
எதனை ஆனந்தம்
முதல் முறை இதையும்
உனக்கான நினைவேட்டில் நிரப்பிக்கொள்கிறேன்.

நீயும் நானும்
உரையாடி கரைந்த தருணங்களில்
தடை பட்டு தொலைந்து போன
வார்த்தைகளின் மிச்சங்கள் எல்லாம் புதிதாய்
சில சொற்தொடர்
உயிர்பெற்று மீண்டும்
சுவாசிக்க தொடங்கிவிட்டது
நன் இருவருக்கும் இடையேயான காதலென.....

உங்கள் அன்புடன் தர்ஷன். :)


 


Offline gab

Re: காதல் அரங்கேற்றம்
« Reply #1 on: August 23, 2013, 10:08:04 PM »
நல்ல கவிதை வரிகள் நண்பா. உங்கள் முதல் பதிவே மிக அருமை. தொடரட்டும் உங்கள் கவி பயண.ம்

Offline kanmani

Re: காதல் அரங்கேற்றம்
« Reply #2 on: August 23, 2013, 11:21:52 PM »
எழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலை உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கின்றது உனக்கான பிரியங்கள்
என் இதயமெங்கும்.

எனக்கான கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மௌனத்தில் இடருகிறாய்.


nice lines dharshan .. inum neriya kavidhaigal ungalidam irundhu ethirpakiren

Offline DharShaN

Re: காதல் அரங்கேற்றம்
« Reply #3 on: August 24, 2013, 01:48:23 AM »
நன்றி திரு கப் அவர்களுக்கும் தோழி கண்மணி அவர்களுக்கும்

தர்ஷன்  :D

Offline CharuPriYa

Re: காதல் அரங்கேற்றம்
« Reply #4 on: August 24, 2013, 01:56:06 AM »
:P juper dharshan..nice kavithai  ;)

Offline DharShaN

Re: காதல் அரங்கேற்றம்
« Reply #5 on: August 24, 2013, 02:04:35 AM »
nanri thozhi charu