Author Topic: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~  (Read 2222 times)

Online MysteRy

பூசணி கூலர்

தேவையானவை: வெள்ளை பூசணி - ஒரு துண்டு, பனங்கற்கண்டு - தேவைக்கேற்ப,



செய்முறை: வெள்ளை பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக்கவும். பிறகு, அதை வேக வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டவும். பனங்கற்கண்டு கலந்து பருகவும்.
நீர்கடுப்பை நீக்கும் பானம் இது! ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பருகலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #1 on: July 15, 2013, 02:21:38 PM »
சின்ன வெங்காயம் துவட்டல்

தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய்யை காயவிட்டு... நறுக்கிய வெங்காயம், மிளகு - சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கீழே இறக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #2 on: July 15, 2013, 02:28:15 PM »
தேங்காய்  வெல்ல பால்

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பால் - கால் கப்



செய்முறை: பாலைக் காய்ச்சி கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் பால், தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.
இதை தோசை, இட்லி, ஆபத்துடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அல்லது,  அப்படியே பருகலாம். தேங்காய்ப் பால் வயிறு, வாய் புண்களை ஆற்ற வல்லது!

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #3 on: July 15, 2013, 02:30:44 PM »
ஜவ்வரிசி பகாளாபாத்

தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், தயிர் - ஒரு கப், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, கேரட் துருவல் - 4 டீஸ்பூன்,  கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேக வைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #4 on: July 15, 2013, 02:37:30 PM »
மேங்கோ கப்

தேவையானவை: மாம்பழம் - ஒன்று, தயிர், பால், சர்க்கரை - தேவைக்கேற்ப.



செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைத்து சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கவும். ஒரு சிறிய கப்பில் சிறிதளவு  தயிர், காய்ச்சி வைத்திருக்கும் பால் சேர்த்து, மேலே சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். இதே போல் சில கப்புகளில் செய்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.
இது... இனிப்பும், புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #5 on: July 15, 2013, 02:44:12 PM »
பச்சைப் பயறு கீர்

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், பால் - ஒன்றரை கப், முந்திரி, பாதாம் - தலா 10.



செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். ஆறிய பின்னர், வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அதனுடன் கலக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதனை அடுப்பில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கினால்... பச்சைப் பயறு கீர் ரெடி!
பச்சைப் பயறு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #6 on: July 15, 2013, 03:22:37 PM »
சம்மர் ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின்பு பருப்புகளுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சூடான சாதத்துடன் நெய், உப்பு, சிறிதளவு அரைத்த பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட... உடல் குளிர்ச்சி பெறும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #7 on: July 15, 2013, 03:24:02 PM »
லெமன் பானகம்

தேவையானவை: சாதம் - எலுமிச்சம் பழம் - ஒன்று, புதினா - சிறிதளவு, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.



செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்... லெமன் பானகம் ரெடி! இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்... சுவை கூடும்.
கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #8 on: July 15, 2013, 03:26:07 PM »
பாசிப்பருப்பு துவையல்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய்  - 4, தேங்காய் துருவல் - அரை கப், பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு... பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால்... பாசிப்பருப்பு துவையல் தயார்.
இந்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #9 on: July 15, 2013, 03:27:34 PM »
கீரைச் சாறு

தேவையானவை: பாசிப்பருப்பு - மணத்தக்காளி கீரை - ஒரு கப், மோர் - ஒரு கப்,  மிளகுத்தூள். சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: மணத்தக்காளி கீரையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோடையில் இது அருமருந்து!

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #10 on: July 15, 2013, 03:29:02 PM »
முளைப்பயறு ட்ரீட்

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: முளைப்பயறை ஆவியில் வேகவைக்கவும் (குக்கரிலும் வேகவிடலாம்). இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்தால்... முளைப்பயறு ட்ரீட் ரெடி!
இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைத்து வயதினரும் சம்மரில் சாப்பிடலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #11 on: July 15, 2013, 03:30:27 PM »
நீராகாரம்

தேவையானவை: சாதம் - ஒரு கப், மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: முதல் நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் மோர், உப்பு சேர்த்துப் பருகவும்,
நீராகாரம் உடல் சூட்டை தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #12 on: July 15, 2013, 03:31:48 PM »
தேங்காய்ப் பால் ரசம்

தேவையானவை: தேங்காய்ப் பால் - ஒரு கப், புளி - நெல்லிகாய் அளவு, தக்காளி - ஒன்று, பூண்டு - 4 பல், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புளியைக் கரைத்து உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப் பாலை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்... ரசம் தயார். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு பல் சேர்த்து தாளித்து... கொதிக்கவிட்டு இறக்கி வைத்த ரசத்துடன் சேர்க்கவும். மேலே மிளகு - சீரகப்பொடி, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #13 on: July 15, 2013, 03:33:18 PM »
அரிசி  மோர் கஞ்சி

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், மோர் - இரண்டு கப், சின்ன வெங்காயம் - 5, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைக்கவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #14 on: July 15, 2013, 03:34:43 PM »
ராகி மோர்க்களி

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், புளித்த மோர் - ஒன்றரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, மோர் மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் தாளிக்கவும். இதில் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, அடுப்பை 'சிம்’மில் வைத்து கிளறவும். நன்கு வெந்து பளபளவென வந்த பின்பு இறக்கி... சிறிய கிண்ணங்களில் பரிமாறவும்.