Author Topic: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~  (Read 2198 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #15 on: July 15, 2013, 03:36:20 PM »
ஃப்ரூட் லஸ்ஸி

தேவையானவை: தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 4



செய்முறை: மாதுளை முத்துக்களை அரைத்து தயிருடன் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். பருகும்போது இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #16 on: July 15, 2013, 03:37:41 PM »
பூசணி இட்லி

தேவையானவை: இட்லி மாவு, பூசணி துண்டுகள் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பூசணியை சிறிய துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.
வெயிலுக்கு ஏற்ற காலைச் சிற்றுண்டி இந்த பூசணி இட்லி! இதற்கு கிரீன் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #17 on: July 15, 2013, 03:39:08 PM »
முளைகட்டிய வெந்தய களி

தேவையானவை: புழுங்கல் அரிசி - 50 கிராம், முளைகட்டிய வெந்தயம் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.



செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் வேகவிடவும். பின்பு பொடித்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அரிசி - வெந்தய விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து களி போல கிளறி சாப்பிடவும்.
உடல் சூட்டை தணிக்கும் களி இது! உடல் நலம் காக்க, இதை தினமும் சிறிதளவு  சாப்பிடலாமே!

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #18 on: July 15, 2013, 03:41:16 PM »
பூசணி பொரியல்

தேவையானவை: வெள்ளை பூசணிக் கீற்று - ஒன்று, மிளகு - 4, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, புளி - கொட்டைப்பாக்கு அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெள்ளை பூசணியை சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் பொடிக்கவும். வெந்த பூசணிக்காயுடன் புளிக் கரைசல், உப்பு, வறுத்த அரைத்த பொடி சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய விட்டு, சீரகம் தாளித்து, வேக வைத்த கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #19 on: July 15, 2013, 03:42:45 PM »
முளைப்பயறு தோசை

தேவையானவை: முளைகட்டிய பயறு - அரை கப், தோசை மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இந்த தோசை மிகவும் சத்துமிக்கது.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #20 on: July 15, 2013, 03:44:13 PM »
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்.



செய்முறை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால் ஸ்ட்ரா பெர்ரி பழத் துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம்.
தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #21 on: July 15, 2013, 03:49:04 PM »
வெள்ளரி மோர் கூட்டு

தேவையானவை: வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4, கெட்டி மோர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #22 on: July 15, 2013, 03:50:54 PM »
அவல் ஃப்ரூட் சாலட்

தேவையானவை: அவல் - ஒரு கப், பச்சை திராட்சை - 10, வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம் பழம் - 10, பப்பாளி - ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் - கால் கப்.



செய்முறை: வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை 5 நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #23 on: July 15, 2013, 03:52:22 PM »
புளி பானகம்

தேவையானவை: புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்.



செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி கொதிக்கவிட்டு, வெல்லக் கரைசல், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நீர் கடுப்பு ஏற்படும்போது கிராமப்புறங்களில் இந்த பானகத்தை பருகுவார்கள். இது சோர்வை நீக்க வல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #24 on: July 15, 2013, 03:53:48 PM »
முள்ளங்கி ராய்தா

தேவையானவை: முள்ளங்கி - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி - தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #25 on: July 15, 2013, 03:55:13 PM »
மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்

தேவையானவை: கேரட், வெள்ளரிப் பிஞ்சு - தலா ஒன்று, மோர் - தேவையான அளவு, மிளகு - 4, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கேரட், வெள்ளரியை சுத்தம் செய்து... புதினா, மிளகு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை மோருடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துப் பருகவும்.
இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #26 on: July 15, 2013, 04:06:37 PM »
பசுமை சட்னி

தேவையானவை: கொத்தமல்லித் தழை - ஒரு கப், புதினா இலைகள் - அரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கொத்தமல்லித் தழை, புதினா இலைகளை சுத்தம் செய்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்தால்... பசுமை சட்னி தயார்.
வதக்காமல் அப்படியே அரைப்பதால் சத்துகள் வீணாகாது! இது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #27 on: July 15, 2013, 04:10:56 PM »
தர்பூஸ் டிரிங்

தேவையானவை: தர்பூசணி துண்டுகள், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு.



செய்முறை: தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன்  தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இதை அப்படியே பருகலாம். அல்லது, குளிர வைத்தும் பருகலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #28 on: July 15, 2013, 04:43:20 PM »
கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட், எலுமிச்சம் பழம் - தலா ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.



செய்முறை: கேரட்டை கழுவி சுத்தம் செய்து தோல் சீவாமல் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.
இது விட்டமின் 'ஏ’ மற்றும் வைட்டமின் 'சி’ நிறைந்த பானம்!

Offline MysteRy

Re: ~ 30 வகை குளுகுளு உணவுகள் ~
« Reply #29 on: July 15, 2013, 04:45:29 PM »
லெமன்  ஜிஞ்சர் டிரிங்க்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், தேன் - தேவையான அளவு.



செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக குறுகிய பின்பு இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக... கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம்.