உன் பெயரை எழுதும் போது
உன் பெயரில் இருக்கும் எழுத்துக்கள்
எத்தனை அழகு தெரியுமா?
காதல் பைத்தியக்காரத்தனம் என்று சொன்னார்கள்,
அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
உன்னை பார்த்த நாள் முதல்,
உன்னால் என்னுள் எத்தனை மாற்றம்!
இப்போது என்னை அழகு என்கிறார்கள்,
என்னை புத்திசாலி என்கிறார்கள்,
பொறுமையின் சிகரம் என்கிறார்கள்,
எந்த உயிரையும் அன்புடன் பார்க்கிறேன்,
இது எல்லாம் உன்னால் தானே!
இது எல்லாம் காதலால் தானே நடந்தது!
இப்போது காதல் பைத்தியகாரத்தனமா?