Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 23226 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #105 on: February 10, 2013, 09:23:38 PM »


விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன்
மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம்
கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான்.
கதவை திறந்தால்
அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?”
என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3
மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப்
போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன்,
வந்து காரோ எதையோ தள்ளி விட
முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி,
மழை வேற பெய்யுது எவன்
போவான்?”
“பார்த்தீங்களா? 3 மாசம்
முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர்
நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப
நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?
கடவுள் குடிகாரர்களையும்
நேசிப்பார்”
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும்
இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?”
“ஆமா சார் வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன
்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங்க”
“இங்கதான் ஊஞ்சல் மேல
உட்கார்ந்திருக்கேன் வாங்க
வந்து தள்ளிவிடுங்க....

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #106 on: February 10, 2013, 09:34:41 PM »


கொடியில் அசைந்த மலருக்கு கர்வம் தாங்கவில்லை.

தன்னை முத்தமிட வந்த காற்றைக் கண்டு முகந்திருப்பிக் கொண்டது.

அதிர்ந்து வீசிய காற்று மலரைக் கொடியிலிருந்து உதிர்த்தது. கீழே விழுந்த மலர் கதறியது.

காற்று மலரைத் தரையில் இழுத்தது. மலர்அழுதது.


திடீரென்று முரட்டுக் கரமொன்று தன்னைப் பற்றித் தூக்குவதை உணர்ந்தது.

ஆஜானுபாகுவான மனிதர் தன்னைத் தூக்கிச் செல்வதை உணர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டது.

மீண்டும் கீழே விழுந்தது தெரிந்து விழித்துப் பார்த்தால்

ஆலயமொன்றில் ஆண்டவனின் அழகிய மலர்ப்பாதங்களில் அர்ச்சனைப் பூவாய் விழுந்தது தெரிந்தது.

தனது கர்வம், வெறுப்பு, அச்சம் அனைத்தும் கரைந்து தன் பிறவியின் பயனை உணர்ந்தது மலர்.

எல்லாத் திறமைகளும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாகும்போதுதான் அர்த்தம் பெறுகின்றன.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #107 on: February 10, 2013, 09:43:28 PM »


ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.

அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்

.ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.

வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.

அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று
பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது

.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்

,''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #108 on: February 10, 2013, 09:49:51 PM »


ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில்
வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.

ஆனால் அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் "இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினான். ஆனால் அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர்.

நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக்
கொண்டான்.

அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும் அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான். பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது "இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று தட்டி தட்டி
எழுதினான்.

இதைப்பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், "உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்கு
என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை" என்று சொல்லி கேட்டான்.

அதற்கு அறை வாங்கிய நண்பன் "யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு
யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது" என்று சொன்னான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #109 on: February 10, 2013, 09:57:06 PM »


உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது. வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது. பூங்கொத்தும், பிரியமும் தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள்.

அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது. படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள்.

இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான்.

பூங்கொத்தில் ஒரு வாசகம். 'மரணம் உயிரைத்தான் பிரிக்கும், காதலையல்ல. நான் உன்னை நேசிக்கிறேன்'.

அவளுக்கோ கோபம்.

பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள்.

'வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா?' என சீறினாள்.

அவன் நிதானமாய்ச் சொன்னான்.

'அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால் கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை.

எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுது - 'மரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல'... என்று.

இதாம்மா நடந்தது' அவன் சொன்னான்.

அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன.

உண்மைக் காதல் ஆழமானது.
காதலின் உண்மை வேர்களில் தெரியும், பூக்களில் அல்ல.
போலிகளைப் புறக்கணியுங்கள்.
உயிரில் உலவும் உண்மை
அதுவே காதலின் தன்மை!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #110 on: February 10, 2013, 10:00:55 PM »

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள்.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,

காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து

. கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.

முதலில் ஜன்னலை மூடுங்கள்..ஒருத்தி செத்து விடுவாள்.

அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!.

.சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..

பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #111 on: February 14, 2013, 09:53:09 PM »

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார
அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ”அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி
முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி! ”ஹா… இவனுக்கு
ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த சர்தார்ஜி.அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார். அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய
ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
”என்னால நம்பவேமுடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார்
- ”இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது… ஒரு கண்ணுதானே இருக்கு!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #112 on: February 14, 2013, 10:10:30 PM »
"அழகான வேலை "


முல்லா ஒருநாள் தன் கிராமத்தில் இருந்த ஒரு கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார். கடை வாசலில் தன் கழுதையை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்.

திரும்ப வந்து பார்த்தபோது யாரோ அவருடைய கழுதையின் மீது சிவப்பு வண்ண பெயிண்டை அடித்து வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் அவருக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது.

அவர் சப்தம் போட்டு, ''யார் என் கழுதைக்கு இப்படி பெயின்ட் அடித்தது? இன்று அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்.'' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், ''யாரோ ஒரு புதியவர் கழுதையின் மீது பெயின்ட் அடித்துவிட்டு இப்போதுதான் அந்த மதுக் கடைக்குள் சென்றார்,'' என்றான்.

முல்லாவும் மதுக்கடைக்குள் சென்று, ''யார் என் கழுதையின் மீது பெயின்ட் அடித்தது?'' என்று ஆத்திரத்துடன் கேட்டார். ஒரு வாட்டசாட்டமான ஆள் ஒருவர் முன் வந்து, ''நான்தான் அடித்தேன். இப்போது என்ன செய்யப் போகிறாய்?'' என்று இளக்காரமாகக் கேட்டார்.

அந்த ஆளின் புஜ பலத்தைப் பார்த்தவுடன் அரண்டு போன முல்லா "'ஹி,ஹி.. .நீங்கள் தானா. வேறு ஒன்றுமில்லை, கழுதையின் மீது நீங்கள் அடித்த முதல் பெயின்ட் காய்ந்து உலர்ந்து விட்டது.எனவே நீங்கள் வந்து அடுத்த கோட் பெயின்ட் அடிக்கலாம் என்பதைச் சொல்ல வந்தேன்.'' என்று வழிந்தார்.

இப்படித்தான், நாம் ஒவ்வொருவரும் நாம் பலசாலியாக இருந்தால் சண்டைக்கு தயாராகி விடுகிறோம். எதிரி பலசாலியாக இருந்தால் அங்கு நம் கோபம் செல்லுபடி ஆவதில்லை. நாம் பயந்து சரண் அடைந்து விடுகிறோம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #113 on: February 14, 2013, 10:18:22 PM »

அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது அறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை.

உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக “ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்” என்றது.
மனைவி கேட்டாள், “இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்.”
கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது. இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், “என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்.”
அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #114 on: February 14, 2013, 10:32:03 PM »

ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.

அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.

‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.

‘தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டாதான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. ‘இதை எப்பவும் மறந்துடாதே!’

அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. ‘நெய் சாப்பிட்டா பலமாயிடமுடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை’ என்று நினைத்தான். ஆனாலும் பாட்டி மனம் கோணக்கூடாதே என்பதற்காக வாங்கிக்கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.

அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்கதான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். சிவப்புக் கலரில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.

அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாத விஷயம், அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில். டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.

சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். ‘யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?’

‘நான்தான்ங்க. ஏன்?’ அப்பாவியாக விசாரித்தான் இவன்.

‘யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!’

அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது. ‘எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!’ என்று நெகிழ்ந்தான்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜென் குரு அவன் தலையில் குட்டினார். ‘முட்டாளே, ஒருவர் நிலாவைச் சுட்டிக் காட்டினால், நிலாவைப் பார்க்கப் பழகு. சுட்டிக் காட்டுகிற விரலையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்காதே!’ என்றார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #115 on: February 14, 2013, 10:36:29 PM »
(ரயில் பயணங்கள்..)


''நீங்களும் உங்க மனைவியும் சென்னை வரைக்கும் வர்றீங்களாய''..
''ஆமாங்க.''
..
''நானும் என்மனைவியும் சென்னை வரைக்கும் வர்றோம்..நான் பேங்கிலே ஆபிசராக இருக்கேன்..நீங்க.''
.
''நான் தொடக்கப்ப.ள்ளி ஆசிரியராய் இருந்தேன்..ரிடையாராயிட்டேன்.''

''ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும்அ...ஆ...சொல்லி காலத்தை ஓட்டி இருப்பீங்க.''
..
''அ..ஆ..மாறவே இல்லையே..அதைத்தானே சொல்லதரமுடியும்..நீங்கஉங்க குழந்தைகளை மட்டும் பார்த்திருப்பீங்க..இரண்டு மூணு வருஷம் மட்டும்..நாங்க வாழ்க்கை முழுதும் குழந்தைகளை பார்த்துக்கிட்டு இருந்தோம்.''
.
''என்ன இருந்தாலும் சின்ன பசங்களோடு உங்க உத்தியோகம் முடிந்துடுது..இப்ப பாருங்க ..நான் பேங்க் மேனேஜர்..எல்லா மனிதருடனும் தொடர்பு உண்டு.. நான் இந்த ரயில்லே எக்மோர் வர்ரேன் சொன்னதும் ஒரு பெரிய பார்ட்டி ஸ்டேனுக்கே வந்து காரில் அழைச்சு வீட்டிலே கொண்டுவந்துவிடறன்னூ வர்றார்..உங்க உத்தியோக்த்தில் முடியுமா..பஸ் பிடிச்சு கூட்டத்திலே போக முடியும்..''

ஆசிரியருக்கு பேங்க்கார்ரிடம் எதுவும் பேச விருப்பம் இல்லை.

சென்னை வந்தது..மேனஜர் சொன்ன பெரிய மனிதரும் வந்தார் ..
.
எதேச்சையாக ஆசிரியரை பார்த்தார்..அந்த பெரிய மனிதர்

''ஆ..சார் நீங்களா..வில்லிவாக்கத்திலே மகன் வீட்டுக்கு போறீங்களா..நானே கொண்டுவந்துவிடுகிறேன்..
மேனேஜர் சார்..இவர் என்னோட ஆசிரியர்..அரி ஓம
சொல்லிகொடுத்தவர்..இவருக்கு பணி செய்ய கொடுத்து இருக்கனும்..நீங்க எதாவது ஆட்டோ பிடித்து போங்க..வருத்தபடாதீங்க.''.என்று கிளம்பினார்.

பேங்க் மேனேஜர் பரிதாபமாக நின்றார்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #116 on: February 14, 2013, 10:41:37 PM »

ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல
பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல
விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,
எப்படியாவது கிடைச்சுரனும்னு. அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது. இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான். உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ் (pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது, இவன் அதற்கு”இது இல்ல”னு பதிலளித்தான்.
உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு “கால்குலேட்டர்(calculator)” மாதிரியான பொருளை கொண்டு வந்து இதுதானா என வினவியது. இப்பவும் மனிதன் “இது இல்ல”னு சொன்னான், .தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய
லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது. இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.
(நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற
விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும்
அவனிடமே கொடுத்து விடும்.)
இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு
சிரித்தது..மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு?
தேவதை சொன்னது” நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன் ,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர்
காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்”எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதேனு சொல்லிட்டு மறைந்தது .மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #117 on: February 14, 2013, 10:45:24 PM »

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #118 on: February 14, 2013, 10:48:06 PM »

கலைக்கூடமொன்றில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாள் ஓவியர் ஒருவர்.

அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.
.

"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல சேதி ஒன்றும், கெட்ட சேதி ஒன்றும் உள்ளது."

அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"

"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார். ஆம். கூடும் என்று நான் சொன்னவுடன், 15 ஓவியங்களையும் அவரே வாங்கி விட்டார்."

"அப்படியா? மிகவும் நல்லது. சரி. அந்த கெட்ட சேதி?"

"அந்த ஆள் வேறு யாருமில்லை. உங்கள் குடும்ப டாக்டர் தாம்."

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226591
  • Total likes: 28985
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #119 on: February 14, 2013, 10:53:25 PM »
குரங்குகளை எப்படிப் பிடிப்பது?


ஒரு காலத்தில் செர்ரிப் பழங்கள் மீது பெரும் விருப்பம் கொண்ட குரங்கொன்று வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ருசியைத் தூண்டும் வகையில் இருந்த செர்ரிப் பழத்தைப் பார்த்து , அதைத் தின்பதற்காக மரத்தை விட்டுக் கீழிறங்கி வந்தது அந்தக் குரங்கு.

ஆனால் அருகில் வந்தவுடன்தான், அப் பழமானது கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதைக் கண்டது அக்குரங்கு.

சிற்சில முயற்சிகளுக்குப் பிறகு, குடுவையின் கழுத்துப் பகுதியின் வழியாகத் தன் கையை விட்டுத்தான் பழத்தை எடுக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டது குரங்கு.

அப்படி குடுவையின் கழுத்துப் பகுதி வழியாக கையை விட்டு, பழம் கையில் தட்டியவுடன் அதைத் தன் உள்ளங் கைக்குள் மூடிக் கொண்டது குரங்கு. அந்தப் பழத்துடன் மூடியவாறே தன் மணிக்கட்டை வெளியே எடுக்க முயன்ற குரங்கு, அப்படி முடியாதென உணர்ந்து கொண்டது.

ஏனென்றால் கையை வெளியே எடுக்க முடியா வண்ணம் குடுவையின் கழுத்துப் பகுதி குறுகலாக இருந்தது.

இந்த விஷயங்களனைத்தும் கவனமாக முன்னே திட்டமிடப் பட்டவை.

குரங்குகள் எப்படி யோசிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த வேட்டைக்காரன் ஒருவன்தான் செர்ரிப் பழத்தை, குரங்கைப் பிடிப்பதற்கான பொறியாக வைத்திருந்தான்.

கை மாட்டிக் கொண்ட பீதியில் குரங்கு போட்ட சப்தத்தைக் கேட்டு வேட்டைக்காரன் வெளி வந்தான். அவனைப் பார்த்த பின்பு தப்பிக்க எண்ணிய குரங்கின் கை குடுவையினுள் மாட்டியிருந்ததால் அதனால் வேகமாக ஓட முடியவில்லை.

ஆனால் குரங்கிற்கு ’தன் கைக்குள்தான் பழம் உள்ளது. . பழம் வேறு எங்கும் போய் விடவில்லை' என்ற ஆறுதலான நினைப்பிருந்தது.

வேட்டைக்காரன் குரங்கைத் தூக்கினான். அடுத்த நொடியில் குரங்கின் முழங்கைக் கணுவில் பலமாக ஒரு சுண்டு சுண்டினான். சுண்டப்பட்ட அதிர்ச்சியில் குரங்கு பழத்தின் மீதிருந்த பிடியை விட்டது. இப்போது குரங்கு சுதந்திரமடைந்துவிட்டது. ஆனால் வேட்டைக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டது. வேட்டைக்காரன் பழத்தையும், கண்ணாடிக் குடுவையையும் பயன்படுத்தினாலும் அந்த உடமைகள் இழக்கப்படாமல் அவன் வசம் தங்கின.