வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்!!!
இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள். மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம் எந்த ஒரு செயலுக்கு தீர்வு இல்லாமல் இருக்காது. அதுப்போல் தான் வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், கொழுப்புகள் கரைந்து, அழகான ஸ்லிம்மான தோற்றத்தைப் பெறலாம். சரி, அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!