Author Topic: ~ வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்!!! ~  (Read 1358 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள். மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம் எந்த ஒரு செயலுக்கு தீர்வு இல்லாமல் இருக்காது. அதுப்போல் தான் வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், கொழுப்புகள் கரைந்து, அழகான ஸ்லிம்மான தோற்றத்தைப் பெறலாம். சரி, அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


கருப்பு பீன்ஸ்

பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


பேரிக்காய்

 பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


பாப்கார்ன்

ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும் சிறந்தது. ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட, அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பையும் வராமல் தடுக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


உருளைக்கிழங்கு

அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


வேர்க்கடலை நட்ஸ்

 வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சூரியகாந்தி விதைகள்

கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


வெள்ளை டீ (White Tea)

 நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது. இந்த ஆசிட் உடலில் சென்றால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும். ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


குசம்பப்பூ எண்ணெய் (Safflower Oil)

உடலில் தொப்பை ஏற்படுவதற்கு காரணமே உண்ணும் உணவுகள் தான். ஆனால் அதே உணவுகளில் சில உணவுப் பொருட்கள் உடல் எடையை குறைத்து, தொப்பை ஏற்படாமல் தடுக்கும். அதிலும் சாலட்டில் சேர்க்கப்படும் குசம்பப்பூ எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஓர் ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் குசம்பப்பூ எண்ணெயை உடலில் சேர்த்தால், நிச்சயம் தொப்பையைத் தடுக்கலாம் என்று சொல்கிறது.