Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
« previous
next »
Print
Pages:
1
2
[
3
]
Go Down
Author
Topic: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~ (Read 1786 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #30 on:
December 27, 2015, 03:28:11 PM »
வால் மிளகு
வால் மிளகு குளிர்ச்சித்தன்மை கொண்டது. மேலும், இதைச் சாப்பிடும்போது நாக்கில் ஒரு விறுவிறுப்புத்தன்மையை உணர முடியும்.
இரும்புச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து போன்றவை வால் மிளகில் அதிகம்.
தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தபடுகிறது.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் வால்மிளகு ரசம் வைத்துச் சாப்பிடலாம்.
தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், வால் மிளகை நெய் விட்டு வறுத்து, அரைத்துப் பொடித்துவைத்து, அரை தேக்கரண்டி வால் மிளகுப் பொடியை எடுத்துத் தேனில் குழைத்து, நன்றாகத் தொண்டையில் படுமாறு வைத்துச் சாப்பிட வேண்டும். இதன் மூலம், தொண்டையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கும்.
வாயுப் பிரச்னை உள்ளவர்கள், அல்சர் கோளாறு உள்ளவர்கள் வால் மிளகைக் குறைவாகப் பயன்படுத்துவதே நல்லது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #31 on:
December 27, 2015, 03:29:24 PM »
கடுக்காய்
இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மறுநாள் மலம் இளகி வெளியேறும்.
கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் விளக்கினால், பல் உறுதியாகும். ஈறில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.
25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியை எடுத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் குடித்துவந்தால், கண் நோய்கள் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.
20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளைக்குச் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண் குணமாகும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவைதான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் பெருகும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #32 on:
December 27, 2015, 03:30:50 PM »
கல்பாசி
கடற்பாசி என்பதும் கல்பாசி என்பதும் ஒன்று அல்ல. கல்பாசி, இந்தியாவில் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
கல்பாசிப்பூவுக்கு ஆங்கிலத்தில் ‘பிளாக் ஸ்டோன் ஃபிளவர்’ என்று பெயர். கல்பாசி, சிறிது கசப்புச் சுவைகொண்டது.
கல்பாசிப்பூ வலி நிவாரணி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமான மணடலத்தில் அழற்சி போன்றவை ஏற்படுவதைத் தடுக்கவே கல்பாசிப்பூவை மசாலா பொருட்களில் சேர்க்கிறார்கள்.
கல்பாசிப்பூ, செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குணமாக்கும்.
உடல் வெப்பத்தைக் கட்டுக்குள்வைக்கும். ஆன்டிபாக்டீரியல் மருந்தாகச் செயல்படுகிறது. சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும். வெறுமனே கல்பாசியைச் சாப்பிடக் கூடாது. உணவுப்பொருளோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #33 on:
December 27, 2015, 03:31:47 PM »
அதிமதுரம்
தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும். கப நோய்களைக் குணப்படுத்தும் கண் நோய்கள் நீங்கும், பார்வை தெளிவடையும். வாய்ப்புண், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் அதிமதுரம் சரி செய்யும். வயிற்றுப்புண்களை ஆற்றும். ப்ராஸ்டேட் மற்றும் சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும்.
Logged
Print
Pages:
1
2
[
3
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~