Author Topic: பிரைட் ஐஸ்கிரீம்  (Read 925 times)

Offline kanmani

பிரைட் ஐஸ்கிரீம்
« on: November 26, 2012, 01:18:16 PM »
வென்னிலா ஐஸ்கிரீம்     - 8 சின்ன ஸ்கூப்
முட்டை             - 1
ஸ்பான்ஞ் கேக்         - 300 கிராம்
வெண்ணெய்         - 125 கிராம்
கிரீம்                 - 125 மி.லி
எண்ணெய்             - தேவையானவை
சர்க்கரை             - 90 கிராம்
ஒரு தட்டில் பேக்கிங் பேப்பரை பரப்பி அதில் ஐஸ்கிரீமை சின்ன சின்ன ஸ்கூப்பாக வைத்து பிரீசரில் வைக்கவும். ஐஸ்கிரீம், நன்கு கட்டியாகும் வரை பிரீசரில் இருக்கணும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். ஸ்பான்ஞ் கேக்கை 5மிமீ மெல்லிய சதுர துண்டுகளாக வெட்டி அதன்மேல் அடித்த முட்டையை பரப்பவும்.

பிறகு நன்கு கட்டியான ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து ஒரு துண்டு கேக் மேல் வைத்து அதை பந்து போல் நன்கு உருட்டவும். இதனை மறுபடியும் தட்டில் பரப்பி ஒரு நாள் முழுவதும் பிரீசரில் வைக்க வேண்டும். ஐஸ்கிரீம் நன்கு கெட்டியானதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.