Author Topic: மைதா-எள்ளு பிஸ்கட்  (Read 729 times)

Offline kanmani

மைதா-எள்ளு பிஸ்கட்
« on: November 25, 2012, 12:21:58 PM »
ஈவினிங் நேரத்தில் இதுவரை குழந்தைகளுக்கு பஜ்ஜி, போண்டா என்று தான் செய்து கொடுத்திருப்போம். ஆனால் அவர்களுக்கு வீட்டிலேயே மைதாவை வைத்து ஒரு சூப்பராக பிஸ்கட் செய்து தரலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவை ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அதனை போட்டு, உப்பு, வெண்ணெய் மற்றும் எள் சேர்த்து, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைய வேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போல் தேய்த்து, பின் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேய்த்து வெட்டி வைத்துள்ள மாவுத் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது வித்தியாசமான மைதா-எள்ளு பிஸ்கட் ரெடி!!!

குறிப்பு: வேண்டுமெனில் இதில் உப்பிற்கு பதிலாக சர்க்கரையை பொடி செய்து, போடலாம்.