Author Topic: தேங்காய் பால் புளிக்குழம்பு  (Read 1003 times)

Offline kanmani

Coconut Milk Tamarind Curry
Olive and Tomato Pasta by Tarla Dal...

சாதாரணமாக புளிக்குழம்பு என்றாலே நா ஊறும். இதில் தேங்காய் பாலை வைத்து, தேங்காய் எண்ணெயிலேயே புளிக்குழம்பு செய்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். அந்த தேங்காய் பால் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

மல்லி - 3 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காய் துருவி, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாலில் புளியை ஊற வைக்க வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து இறக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து மசாலாப் போல் நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றி, சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் வறுத்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பை சேர்த்து. 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் தீயை குறைவில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான தேங்காய் பால் புளிக்குழம்பு ரெடி!!