Author Topic: சில்லி சப்பாத்தி  (Read 841 times)

Offline kanmani

சில்லி சப்பாத்தி
« on: November 23, 2012, 11:20:01 PM »
என்னென்ன தேவை?
சப்பாத்தி - 2,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 1,
சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
சிவப்பு ஃபுட் கலர் - 1 துளி,
கொத்தமல்லி இலை - கால் கட்டு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்னத் துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, அதில் எல்லா சாஸ் வகைகளையும் சேர்க்கவும். ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும். பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.