Author Topic: இளநீர் பாயசம்  (Read 824 times)

Offline kanmani

இளநீர் பாயசம்
« on: November 23, 2012, 11:09:06 PM »
என்னென்ன தேவை?

பால் - 4 கப்,
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப்,
இளநீரிலுள்ள வழுக்கைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - 1 கப்,
சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - 1 கப்.



எப்படிச் செய்வது?

பாலை சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறக்கவும். சற்று ஆறியதும், வழுக்கைத் துண்டுகள்,  பால் சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது வழுக்கைக் காயை அரைத்தும் பாயசத்தில் சேர்க்கலாம்.