Author Topic: குளிர்காலத்துல கூந்தல் ஆரோக்கியமா இல்லைன்னு எப்படி தெரிஞ்சுக்குறது?  (Read 685 times)

Offline kanmani

காலநிலையானது மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், கூந்தலில் அதிக பாதிப்பு ஏற்படும். இந்த நேரத்தில் தான் கூந்தலில் அதிக வறட்சி, பாதிப்புகள் போன்றவை ஏற்படும். எதற்கென்றால் குளிர்காலத்தில் நமது உடலில் உள்ள வெப்பம் எண்ணெய் பசையை விரைவில் உறிஞ்சிவிடும். இதனால் முடிகளுக்கு போதிய வலு இல்லாமல், வறட்சியடைந்து, உதிர ஆரம்பிக்கும். ஆனால் சில நேரங்களில் எந்த ஒரு காரணமுமின்றி, கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் அல்லது உதிர்வது போன்ற செயல்கள் நடைபெறும். ஏனெனில் சில சமயங்களில் என்ன தான் பராமரித்தாலும் கூந்தல் ஆரோக்கியமற்று இருப்பதை தெரிந்து கொள்வதே கடினமாகிவிடும். சரி, இப்போது எந்த மாதியான அறிகுறிகள் இருந்தால், கூந்தல் ஆரோக்கியமற்று இருக்கின்றதென்றபதை தெரிந்து கொள்ள முடியும் என்பதை பார்ப்போமா!!!

signs damaged hair winter

* கூந்தல் பாதிப்படைந்துள்ளதென்றால், கூந்தல் முதலில் அதன் மென்மைத் தன்மையை இழந்து காணப்படும். மேலும் திடீரென பட்டுப்போன்று அழகாகக் காணப்படவில்லையெனில், அது ஆரோக்கியமற்று உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* அடுத்ததாக கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்புகள் கூந்தலின் முனைகளில் இரண்டாக பிளவுபட்டு, கூந்தலின் அழகையே கெடுத்து, முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்படும்.

* பிளவுகள் ஏற்பட்டாலே, சாதாரணமாக வளரும் கூந்தலின் வளர்ச்சியில் தடை ஏற்படும். இதனால் கூந்தலின் மயிர்கால்களில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* எப்போது கூந்தலின் இயற்கை நிறமான கருப்பு நிறம் மாறி, செம்பட்டை நிறத்தில் மாறுகிறதோ, அதை வைத்தும் கூந்தலின் ஆரோக்கியமற்ற நிலையை தெரிந்து கொள்ளலாம்.

* முடியை சீவும் போது அதிகமான அளவில் கூந்தல் சீப்புடன் வந்தால், கூந்தல் முற்றிலும் வலுவை இழந்து மோசமான நிலையில் உள்ளது என்பதை அறியலாம்.

* ஆரோக்கியமற்ற கூந்தலுக்கும், கூந்தல் வறட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் கூந்தல் வறட்சி அதிக அளவில் இருப்பின் அது கூந்தல் அதிகம் பாதிப்படைந்துள்ளது என்பதற்கு அறிகுறி. ஆகவே அடிக்கடி எண்ணெய் குளியலை மேற்கொள்வது நல்லது.

* சிலருக்கு கூந்தலின் முனைகள் மட்டும் அடர்த்தி குறைவாக காணப்படும். இவ்வாறு இருந்தாலும் எளிதில் கூந்தலின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.

* இளம் வயதிலேயே வெள்ளை முடியானது வந்துவிடுகிறது. சிலருக்கு அது பரம்பரையின் காரணமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாமல், வெள்ளை முடி 25 வயதிலேயே வந்துவிட்டால், கூந்தலில் ஏதோ பிரச்சனை என்பதை அறியலாம்.

மேற்கூறியவையே கூந்தல் பாதிப்படைந்துள்ளதை தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள்.