துவரம் பருப்பு - அரை கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
பச்சை மிளகாய் - ஒன்று
சோம்பு - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் மணி நேரம் ஊற விடவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஊற வைத்த துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து பருப்பு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குழையாமல் வேகவைக்கவும்.
தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி போட்டு வதக்கவும். வெந்த பருப்பில் வதக்கிய பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்.
பருப்பில் உப்பு, காரம் சேர்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், சீரகம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் கொட்டவும்.
ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
சுவையான பருப்பு பச்சடி தயார்.