Author Topic: கஜூர்  (Read 792 times)

Offline kanmani

கஜூர்
« on: November 21, 2012, 12:04:47 PM »

    மைதா - 3 கப்
    வெண்ணெய் - 75 கிராம்
    சீனி - ஒன்றரை கப்
    ரவை - ஒரு கப்
    முட்டை - இரண்டு
    ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
    பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
    உப்பு - சிறிது
    எண்ணெய் - பொரிக்க

 

 
   

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
   

வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.
   

முட்டையை நன்கு கலக்கி கொள்ளவும்.
   

முட்டை கலவையில் சீனி, பேக்கிங் பவுடர், உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
   

பிறகு உருக்கிய வெண்ணெய், ரவை, மைதா சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசையவும்.
   

சிறிது மாவை எடுத்து படத்தில் உள்ளது போல் நீளமாக உருட்டிக் கொள்ளவும்.
   

உருட்டி வைத்த மாவை தட்டி கஜூர்களாக வெட்டவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
   

சுவையான கஜூர் ரெடி. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.