Author Topic: பெண்களைக் கவரும் ஆண்களின் சிறந்த செயல்கள்!!!  (Read 717 times)

Offline kanmani

இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள். அதில் பெண்கள் ஆண்களை நிறைய விதத்தில் எப்படி கவர்கின்றனரோ, அதேப்போல் ஆண்களும் பெண்களை தங்களது ஒருசில செயல்களால் எளிதில் கவர்ந்துவிடுகின்றனர். சொல்லப்போனால் தற்போதுள்ள காலத்தில் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மடிவதை விட, பெண்கள் தான் ஆண்களிடம் எளிதில் மடிந்துவிடுகின்றனர். இதற்கு இன்றைய ஆண்கள் அவ்வளவு அழகாக தங்களது அழகை பராமரிப்பதோடு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு புத்திசாலித்தனத்துடன் நடக்கின்றனர். அதிலும் இன்று "ஆண்கள் தினம்". ஆகவே இன்றைய ஆண்கள் தினத்தின் போது ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை விரைவில் கவர்ந்து காதல் செய்யுமளவு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போமா!!!

things that men s using attract women

* எந்த ஒரு பெண்ணுக்கும் தன்னிடம் மரியாதையுடன் நடக்கும் ஒரு ஆணை மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஆண் பெண்ணின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து, அவள் கருத்தை மதித்து அதனை ஒப்புக் கொண்டு, அவளுக்கு ஆதரவாக இருந்தாலோ அல்லது எப்போதும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டு, கோபப்பட வேண்டிய விஷயத்தில் மட்டும் கோபப்பட்டு வந்தால், அப்போது அவன் அந்த பெண்ணின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிடுகிறான்.

* ஆண்கள் பெண்ணிடம் மிகவும் கருணையுடன், அதிக அக்கறை கொண்டு பேசினாலும் பெண்கள் அவர்கள் அன்பில் சீக்கிரம் சிக்கிக் கொள்வார்கள். ஏனெனில் எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தானே விரைவில் ஈர்க்கும்.

* எந்த பெண்ணுக்கும் வாழ்க்கையில் நல்ல நிலையில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து, அவர்களிடம் மரியாதையோடும், அக்கறையோடும் போசினால், அந்த ஆண் அவர்களிடம் சீன் போட வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் பொறுப்பு வந்தாலே, அனைத்து குணங்களும் தானாக வந்துவிடும். பின் எதற்கு வெட்டி சீனு?

* சில ஆண்கள் தாங்கள் அணியும் உடையிலேயே பெண்களை கவர்ந்துவிடுகின்றனர். அதிலும் அவர்கள் சொல்லும் ஆடையை அணிந்து வந்தால், பின் நீங்கள் உடனே ஹீரோ தான். ஏனெனில் எந்த ஒரு பெண்ணுக்கும் ஆண்கள் தான் சொல்வதைக் கேட்டால், மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த விஷயத்தில் ரொம்பவே பிடிக்கும்.

* ஆண்கள் நல்ல புத்திசாலியானவர்கள். எப்படியெனில் அவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டதை, தோழியோ அல்லது காதலியோ பார்த்துவிட்டால், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை நன்கு தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் அவர்களிடம் நடந்து பெரிய ஐஸ் கட்டிகளையே வைத்துவிடுவார்கள். பின் என்ன அவளும் சிரித்து மயங்கிவிடுவாள்.

மேற்கூறிய சில செயல்களால் தான் ஆண்கள் பெண்களை எளிதில் கவர்ந்து, காதலில் விழச் செய்கிறது. வேறு என்னவெல்லாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.