Author Topic: ஆண் தாலாட்டு  (Read 2191 times)

Offline Sprite

ஆண் தாலாட்டு
« on: September 03, 2011, 09:29:19 PM »
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

தென்றல் தீர்ந்துவிடும்
திங்கள் மறைந்துவிடும் என்றா அழுகிறாய்

கடல் கொண்டுவிடும்
இமயம் தின்றுவிடும் என்றா அழுகிறாய்

ஓசோன் பல ஓட்டை விழும்
உலகம் அழிந்துவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

காடு குறைந்துவிடும்
காற்றும் நின்றுவிடும் என்றா அழுகிறாய்

மாசு சூழ்ந்துவிடும்
மக்கள் என்ன செய்வார் என்றா அழுகிறாய்

சூரியன் சுட்டுவிடும் மனித
சுதந்திரம் கெட்டுவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

விஞ்ஞானம் தொட்டுவிடும்
வியாபாரத்தில் செயற்கை உலகம் கட்டிவிடும் என்றா அழுகிறாய்

பல நோய் தாக்கும்
பணபேய் தலைதூக்கும் என்றா அழுகிறாய்

சாக்கடை நீராகும் அதற்கு
சமுத்திரம் பேராகும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

நீரில்லை வருங்காலத்திலே வாழ
நிலத்தில் மக்களில்லை என்றா அழுகிறாய்

நீ தூங்கு நிறைய கனவு சொல்லுவேன்
நிதானமாக நீ கேளு ஆராரோ கண்ணா ஆராரோ

என் ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

உன் ஒரு வயதில் உன் கால் பதிக்கும் அது
உழுகின்ற பெரும் ஏர் ஏழுக்கும்

பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது
பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்

உதிர்ந்த முத்துகளை நீ விதை எடுத்து
உழுகின்ற மண்ணிலே நீ முளைத்து

வருகின்ற காலத்திலே வளம் காடாக்கு
வயதுக்கு நீ படிக்கையிலே இது போலாக்கு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

ஆற்று மணலிலே அள்ள அதிசயமாய் மறைஞ்ச தண்ணியிலே
மெல்ல குழிதோண்டு நீ மேக நிழல் கண்டு பின்பு

புதையல் நீராக்கு பூமி சேறாக்கு

விளையாட்டில் விஞ்ஞானம் தோற்கடிச்சு
வெற்றி பெற்றுவிடு விடுதலை இயற்கைக்கு தந்துவிடு

உன்புகழ் தாக்கத்திலே, புகை போக்கத்திலே
ஒசோனை உயர்த்திவிடு இந்த உண்மையை என்றும் கொடு

ஆராரோ கண்ணே ஆராரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

வாலிப வயதினிலே, வயல் காட்டினிலே
வறுமை நீ ஒழிப்பதற்கு வாழ்கையை நட்டுவிடு
என் கண்ணே வருத்தத்தை நீ போக்கு

காலத்திலே உன் காதல் வேகத்திலே
சரித்திரம் மணந்துவிடு, பூமி சமத்துவம் கண்டுவிடு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

அதிகாலை தூக்கத்திலே
செல்போன் அலார சிணுங்களிலே இந்த
ரிங்டோன் அழுகை நான் கேட்டு

ஆன்ம சுவாசத்திலே, பெரும் ஆவேசத்திலே
ஆராரோ என்னை ஆராரோ வந்து
யார் எழுப்ப வந்து யார் எழுப்ப இப்ப நீ தூங்கு
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப.........

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஆண் தாலாட்டு
« Reply #1 on: September 03, 2011, 09:46:52 PM »

Quote
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப.........


no chance................. >:( ;D ;D