Author Topic: இஞ்சி சூப்  (Read 913 times)

Offline kanmani

இஞ்சி சூப்
« on: November 06, 2012, 09:59:29 AM »
தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ginger soup indian style

தேவையான பொருட்கள்:

இஞ்சி விழுது - 5 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி விழுதை போட்டு, நன்கு 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதோடு தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

* இப்போது சத்தான இஞ்சி சூப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.