Author Topic: கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?  (Read 744 times)

Offline kanmani

கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?

கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் அப்போது உண்ணும் உணவிற்கு ஒரு பட்டியலே உள்ளது. அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். இப்போது அந்த பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்ப்போமா!!!

papaya safe or unsafe during pregnancy

பப்பாளி பழம்

பப்பாளியின் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று நிறைய பேர் சொல்வதோடு, மருத்துவர்களும் சொல்கின்றனர். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ மற்றும் பி, பீட்டா-கரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். மேலும் இந்த பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும்.

பப்பாளிக் காய்

பப்பாளியின் காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல என்று பிரிட்டிஷ்ஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இதில் உள்ள பெப்சின் என்னும் பொருள், கருப்பைக்கு சுருக்கத்தை ஏற்படுத்தி கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் பாப்பைன் கருவின் வளர்ச்சியை குறைத்து, கருவிற்கு செல்லும் அனைத்து சத்துக்களையும் தடுத்துவிடும். மேலும் கர்ப்பத்தில் பிரச்சனைகள் இருந்து கர்ப்பமானவர்கள், இந்த பப்பாளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கருச்சிதைவு

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கருவை அழிப்பதை விட, பப்பாளியின் காயை சாப்பிட்டு வந்தால், கரு உருவாகாமல் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் பொருள் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் சாப்பிட்டால், அதில் உள்ள லாடெக்ஸ் நிச்சயம் கர்ப்பத்தை கலைத்துவிடும். அதுவே கர்ப்பமாக இருக்கும் போது சற்று தாமதமாக இந்த பப்பாளியை சாப்பிட்டால், குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும்.

அலர்ஜி

நிறைய பெண்களுக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் அலர்ஜிக்கு லாடெக்ஸ் அலர்ஜி என்று பெயர். இந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதை பார்த்தாலே அவர்களுக்கு அந்த அலர்ஜி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் இந்த அலர்ஜி உள்ள பெண்கள், வாழைப்பழம், கோதுமை மற்றும் ஆப்பிள் போன்றவற்றை கூட சாப்பிட முடியாத நிலையில் பாதிக்கப்படுவர்.

ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதிலும் இந்த பப்பாளியை சாப்பிட வேண்டுமென்றால், உங்கள் மருந்துவரை அணுகி பின்னர் சாப்பிடுங்கள்.