புத்தனை தேடிக் கொண்டிருக்கிறேன் நான்
ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாய்
என்னை கவனித்து கொண்டிருகிறான் அவன்
அவன் அருகே செல்கிறேன்
அவன் கேட்கிறான் "என்ன தேடுகிறாய் ?"
"புத்தனை" என்கிறேன்
"எங்கே தொலைத்தாய் ?"
"இல்லை, தொலைக்கவில்லை!!!"
"எனின், தொலைக்காததை எதற்காக தேடுகிறாய்/எப்படி தேடமுடியும் ?"
"இல்லை, அவந்தான் காணாம*ல் போய்விட்டான்"
"அவனா ?"
"புரியவில்லையே?!!" என்கிறேன்
"அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
தென்பட்டான் புத்தன்