Author Topic: சப்பாத்தி - தால்  (Read 906 times)

Offline kanmani

சப்பாத்தி - தால்
« on: November 05, 2012, 01:10:06 PM »

    சப்பாத்திக்கு:
    கோதுமை மாவு – 3 கப்
    நெய் – ஒரு மேசைக்கரண்டி
    உப்பு – ஒரு தேக்கரண்டி
    புதினா – ஒரு கைப்பிடி
    இஞ்சி – 2 துண்டு
    பூண்டு – 4 பல்
    கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
    பச்சை மிளகாய் – 2
    உப்பு – கால் தேக்கரண்டி
    தால் செய்ய:
    பாசி பருப்பு – அரை கப்
    பெரிய தக்காளி – ஒன்று
    பெரிய வெங்காயம் – ஒன்று
    பச்சை மிளகாய் – 2
    தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
    பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
    எலுமிச்சை பழம் – பாதி
    பூண்டு – 3 பல்
    மல்லி தழை
    கடுகு, உளுத்தப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
    சீரகம் – அரை தேக்கரண்டி
    எண்ணெய் – 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    உப்பு – தேவையான அளவு

 

 
   

முதலில் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
   

பின் அந்த அரைத்த கலவையை கோதுமை மாவில் போட்டு நன்கு கிளறிக் கொள்ளவும்.
   

கிளறிய பின் நெய், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டை பிடித்துக் கொள்ளவும். அதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
   

அரை மணி நேரம் கழித்து அந்த உருண்டையை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் அதை சப்பாத்திக் கல்லில் சப்பாத்திக்கு திரட்டுவது போல் நன்கு திரட்டி எடுக்கவும்.
   

திரட்டிய மாவை தோசைக்கல்லில் ஒவ்வொன்றாக இட்டு நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் திருப்பி திருப்பி போடவும். இப்பொழுது மசாலா சப்பாத்தி ரெடி.
   

டால் செய்முறை: தக்காளி வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
   

முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின் தனியா தூள், பெருங்காயதூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழ சாறு சேர்த்து அடுப்பில் வைக்கவும். மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
   

பிரஷர் இறங்கியவுடன் அந்த பருப்பை மத்தை கொண்டு நன்கு கடைந்துக் கொள்ளவும். பின் கடைந்த பருப்பில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
   

தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
   

தாளித்ததை அந்த பருப்பில் ஊற்றவும். மேலே கொத்தமல்லி தூவி விடவும்.
   

சுவையான தால் ரெடி. க்ரீன் மசாலா சப்பாத்திக்கு ஏற்ற தால் ரெடி. இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.