Author Topic: செட்டிநாடு தோசை  (Read 744 times)

Offline kanmani

செட்டிநாடு தோசை
« on: November 05, 2012, 01:01:37 PM »

    தோசை மாவு - 2 கப்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    காலிஃப்ளவர் - அரை கப்
    பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
    பச்சை, சிகப்பு குடை மிளகாய் - 2 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 4 பல்
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சீரக தூள் - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    மல்லி இலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 

 
   

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃப்ளவர், குடைமிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
   

எண்ணெய் சூடனாதும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.
   

சிவந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
   

பிறகு தக்காளி மற்றும் காய் வகைகளை சேர்த்து வதக்கவும்.
   

காய் அரை வேக்காடானதும் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
   

வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.
   

தோசை கல்லில் மிகவும் மெல்லிய தோசையாக வார்த்து அதன் மேல் சிறிதளவு மசாலாவை பரப்பவும். இதனை திருப்பி போடக் கூடாது. அதனால் தான் மிகவும் மெல்லியதாக தேய்ப்பது மிகவும் அவசியம்.
   

தோசையின் இரண்டு பக்கத்தையும் உள் புறமாக மடித்து நான்காக வெட்டி சட்னியுடன் பரிமாறவும். சுவையான செட்டிநாடு மசாலா தோசை தயார்.