Author Topic: ஃப்ரெஞ்சு டோஸ்ட்  (Read 774 times)

Offline kanmani

ஃப்ரெஞ்சு டோஸ்ட்
« on: November 05, 2012, 12:59:40 PM »

    ப்ரெட் துண்டுகள் - 4
    முட்டை - 2
    பால் - அரை கப்
    வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
    தேன் - 2 அல்லது 3 தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப
    வெண்ணெய் - சிறிதளவு
    எக் லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்:
    ப்ரெட் துண்டுகள் - 2
    பால் - கால் கப்
    கார்ன் ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
    தேன் - 2 தேக்கரண்டி
    வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
    வெண்ணெய் - சிறிதளவு

 

 
   

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
   

முட்டைகளை நன்கு அடித்து, அதனுடன் பால், தேன் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
   

தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், ப்ரெட் துண்டை தயாரித்து வைத்துள்ள கலவையில் இரு பக்கங்களையும் தோய்த்து எடுக்கவும். அதிக நேரம் விட கூடாது. ப்ரெட் ஊறிவிடும்.
   

தவாவில் சிறிது வெண்ணெய் தடவி, ப்ரெட் துண்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.
   

சிவந்ததும் மறு புறமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
   

எக்லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்டுக்கு பாலில் கார்ன் ஃப்ளார் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து வைக்கவும்.
   

இதில் ப்ரெட் துண்டை தோய்த்து, தவாவில் டோஸ்ட் செய்து கொள்ளலாம்.
   

ஏறக்குறைய ஃப்ரெஞ்சு டோஸ்ட்டின் சுவை இதில் கிடைக்கும்.
   

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஃப்ரெஞ்சு டோஸ்ட் தயார். இதனை வெண்ணெய் மற்றும் மேப்பிள் சிரப் உடன் பரிமாறலாம்.

 

பொதுவாக ஃப்ரெஞ்சு டோஸ்ட் செய்ய ஃப்ரெஷ் ப்ரெட்டை விட 2 நாட்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்த ப்ரெட் ஏற்றது. :-) எக்லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்டில் கார்ன் ஃப்ளாருக்கு பதிலாக கடலை மாவு அல்லது கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கொள்ளலாம். இரவே ஃப்ரெஞ்சு டோஸ்ட்டிற்கான கலவை தயார் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால், காலையில் டோஸ்ட் செய்ய ஈசியாக இருக்கும். தேனுக்கு பதில் சர்க்கரையும் பயன்படுத்தலாம். இதில் சிறிதளவு பட்டை தூள் சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும்.