Author Topic: வெஜ் கொத்து பரோட்டா  (Read 736 times)

Offline kanmani

வெஜ் கொத்து பரோட்டா
« on: November 05, 2012, 12:57:19 PM »

    பரோட்டா - 4
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    கேரட், பீன்ஸ், குடை மிளகாய், பச்சை பட்டணி கலவை - சிறிது
    தக்காளி - ஒன்று
    சோம்பு - கால் தேக்கரண்டி
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா - கால் தேக்கரண்டி

 

 
   

அப்சரா குறிப்பில் உள்ளது போல் ( http://www.arusuvai.com/tamil/node/14477 ) பரோட்டா செய்து தயாராக வைக்கவும்.
   

அதை கையால் சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.
   

எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு தாளிக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
   

வெங்காயம் பாதி வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்த காய் கலவை சேர்த்து பிரட்டவும்.
   

காய் பாதி வதங்கியதும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் தெளித்து மூடி வேக விடவும்.
   

காய் வெந்ததும் பரோட்டாவை மசாலாவுடன் கலந்து விடவும்.
   

நன்றாக மசாலா பரோட்டாவில் கலந்ததும் எடுத்து விடலாம். சுவையான வெஜ் கொத்து பரோட்டா தயார்.
 

காய்கள் உங்க விருப்பம் போல் சேர்க்கலாம். கேரட் வெட்டாமல், துருவியும் சேர்க்கலாம். விரும்பினால் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து வதக்கலாம். சோம்பு வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்.