மேல் மாவு செய்ய:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஸ்டஃப்பிங் செய்ய:
எலும்பில்லாத சிக்கன் - ஒரு கப்
வெங்காயம் - 2
குடை மிளகாய் - பாதி
கேரட் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை கப்
சிக்கனை சிறிது உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவி வைத்து கொள்ளவும்.
கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் கேரட் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும். அதில் சிக்கன் சேர்த்துக் வதக்கி கொள்ளவும்.
பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இந்த கலவையை நன்கு ஆற விடவும்.
ஒரு உருண்டை மாவு எடுத்து தேய்த்து ஒரு கரண்டி சிக்கன் கலவையை உள்ளே வைக்கவும்.
பின்னர் அதனை ஓரத்தில் நீர் தடவி முக்கோணமாக மடக்கவும்.
தோசை கல்லில் சப்பாத்தியை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சிக்கன் ஸ்டஃப்ட் சப்பாத்தி தயார். இதனை சிக்கன் சேர்க்காது காய்கறிகள் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.