ப்ரெட் துண்டுகள் - 8
மஷ்ரூம் - 3
வெங்காயம் - ஒன்று
செடர் சீஸ் (Cheddar Cheese) - தேவைக்கு
பட்டர் - தேவைக்கு
கொத்தமல்லி தழை
உப்பு (தேவைப்பட்டால்)
மிளகு தூள் மற்றும் சில்லி ஃப்லேக்ஸ் (Chilli Flakes) - தேவைக்கு (விரும்பினால்)
மஷ்ரூமை சுத்தம் செய்து ஸ்லைஸ் செய்து கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும். வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளை முக்கோணங்களாக நறுக்கி வைக்கவும்.
அவனை 180C’ ல் முற்சூடு செய்யவும். ப்ரெட் துண்டின் மேல் வெண்ணெய் தடவவும்.
ப்ரெட் மேல் ஒரு துண்டு மஷ்ரூம் வைக்கவும்.
அதன் மேல் ஒரு துண்டு வெங்காயம் வைக்கவும்.
அதன் மேல் சீஸ் துருவல் தூவி விடவும். உப்பு தேவைப்படாது, விரும்பினால் இப்போது சேர்க்கவும். இவற்றை அவனில் வைத்து 5 நிமிடம் வரை அல்லது சிவக்க பேக் செய்யவும்.
வெளியே எடுத்து மேலே சில்லி ஃப்லேக்ஸ் (Chilli Flakes) தூவி கொத்தமல்லி வைத்து அலங்கரிக்கவும். சுவையான மஷ்ரூம் டோஸ்ட் தயார்.